கடன் அட்டை பயன்பாடு உயர்வு

கடன்சுமை கட்டுக்குள் இருப்பதாக வங்கிகள் தகவல்

பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளது கடன்­பற்று அட்­டை­கள் மூலம் கூடு­த­லாகச் செலவு செய்­கின்­றனர் என்­றும் இந்­தப் போக்கு இவ்­வாண்டு தொட­ரக்­கூ­டும் என்­றும் சந்தைக் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்து இருக்­கின்­ற­னர்.

செலவு செய்­வது, கொவிட்-19 பெருந்­தொற்­றுக்கு முன்­பிருந்த நிலைக்கு அல்­லது அப்போது இருந்த அள­வை­யும் விஞ்­சி­விட்­ட­தாக சிட்­டி­பேங்க், யுஓபி உள்­ளிட்ட சில வங்­கி­கள் தெரி­வித்­தன.

2021ஐ விட கடந்த ஆண்டு கடன்­ அட்­டை­கள் மூலம் பய­னீட்­டா­ளர்­கள் செலவு செய்­தது கூடி­ய­தாக டிபி­எஸ், ஓசி­பிசி போன்ற மற்ற வங்­கி­கள் கூறின.

பொரு­ளி­யல் மெது­வ­டைந்து வரும் வேளை­யி­லும் வட்டி விகி­ பல ஆண்­டு­களில் காணப்­ப­டாத அள­வுக்கு உச்­சம் தொட்­டி­ருக்­கும் நிலை­யி­லும், கடன்­ அட்­டை­கள் மூலம் செலவு செய்­வது கூடி­யி­ருப்­பது, கடன்­ அட்டை­யால் கடன்­சுமை அதி­க­ரிப்­பது குறித்த அக்­கறையை ஏற்படுத்தியுள்ளது.

இது­வரை நில­வ­ரம் கட்­டுக்­குள் இருப்­ப­தாக சந்தைக் கவ­னிப்­பா­ளர்­கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி­னர். கடன் தொகை­யைச் செலுத்­தாத விகி­தம் குறை­வாக இருப்­ப­தா­க­வும் கடன்­சு­மை­யில் சிக்­கு­வ­தில் இருந்து பய­னீட்­டா­ளர்­க­ளைப் பாது­காக்­க­வும் நடை­மு­றை­கள் நடப்­பில் இருப்­ப­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

நாடு­கள் தங்­க­ளது எல்­லை­களை மீண்­டும் திறந்­த­தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வர்த்­தக நில­வ­ரம் படிப்­ப­டி­யாக மேம்­பட்­டது. இத­னால், விட்­ட­தைப் பிடிக்க பய­னீட்­டா­ளர்­கள் தாரா­ள­மாக செலவு செய்து வரு­கின்­ற­னர்.

2019ஐ விட கடந்த ஆண்டு செலவு செய்­தது ஏறக்­கு­றைய 30 விழுக்­காடு கூடி­ய­தாக சிட்டி­பேங்க் சிங்­கப்­பூ­ரின் கடன்­ அட்டை­கள், தனி­ந­பர் கடன் பிரி­வுத் தலை­வ­ரான திருவாட்டி ரெஜினா லிம் தெரி­வித்­தார்.

சிட்­டி­பேங்க் வாடிக்­கை­யா­ளர்­கள் இவ்­வாண்­டும் செலவு செய்­வ­தைக் குறைக்­க­வில்லை என்­றார் அவர். 2019 முத­லாம் காலாண்­டு­டன் ஒப்­பு­நோக்க, இவ்­வாண்­டின் அதே காலட்­டத்­தில் செலவு செய்­தது 35 விழுக்­காடு கூடி­ய­தாக அவர் சொன்­னார்.

“பய­ணம் செய்­ய­வும் கடைகளில் சாப்­பி­ட­வும் நகை­, கைக்­க­டி­கா­ரம் முதல் துணி­மணி­கள்வரை வாங்­க­வும் மக்­கள் விரும்­பு­கின்­ற­னர்,” என்­றார் அவர்.

கடந்த ஆண்டு கடன்­ அட்டை­கள் மூலம் செலவு செய்­வது கொவிட்-19 பெருந்­தொற்­றுக்கு முன்­பி­ருந்த நிலையை எட்­டத் தொடங்­கி­ய­தா­க­வும் ஆண்­டின் நான்­கா­வது காலாண்­டில் செல­வி­னம் வேக­மாக அதி­க­ரித்­த­தா­க­வும் யுஓபி வங்­கி­யின் தனி­ந­பர் நிதிச் சேவை பிரி­வுத் தலை­வர் ஜாக்குலின் டான் தெரி­வித்­தார்.

உணவு பானம், வெளி­நாட்டுப் பய­ணம், வெளி­நாட்­டில் தங்­கு­மிடச் செலவு, காப்­பு­றுதி ஆகிய பிரி­வு­களில் பய­னீட்­டாளர்­கள் அதி­கம் செலவு செய்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக, பண­வ­சதி உள்­ள­வர்­க­ளி­டையே வெளி­நாட்­டுப் பய­ணம் தொடர்­பி­லான செல­வினம் அதி­க­ரிக்­கும் என யுஓபி எதிர்­பார்க்­கிறது.

இதற்­கி­டையே, 2021ஐ விட கடந்த ஆண்டு கடன்­ அட்டை கட்­ட­ணங்­கள் 20 விழுக்­காட்­டிற்­கு­மேல் கூடி­ய­தாக டிபி­எஸ் வங்கி தெரி­வித்­தது.

மக்­கள் அதி­க­மா­னோர் பயணம் செய்­வ­தா­லும் உண­வ­கங்­களில் குடும்­ப­மா­கச் சாப்­பிடு­வதா­லும் கடன்­ அட்­டை­களில் செலவு செய்­வது அதி­க­ரித்து இருப்­ப­தாக அவ்­வங்­கி­யின் கட்­ட­ணங்­கள், தளங்­கள் பிரி­வுத் தலை­வர் ஆண்டனி சியாவ் தெரி­வித்­தார்.

போக்­கு­வ­ரத்­தி­லும் (40% வளர்ச்சி) இணை­யத்­தில் பொருள் வாங்­கு­வ­தி­லும் (20%க்கு மேல் வளர்ச்சி) பய­னீட்­டா­ளர்­கள் செலவு செய்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஓசி­பிசி வங்­கி­யைப் பொறுத்­த­மட்­டில், பெருந்­தொற்­றில் இருந்து ஒவ்­வோர் ஆண்டும் கடன்­ அட்டை செல­வி­னம் அதி­க­ரித்து வரு­கிறது.

2021ஐ விட கடந்த ஆண்டு தம் வாடிக்­கை­யா­ளர்­கள் கடன்­அட்­டை­களில் 16 விழுக்­காடு கூடு­த­லாக செலவு செய்­த­தாக அவ்­வங்­கி­யின் கடன் வழங்­கும் பிரி­வுத் தலை­வர் கென்னத் டான் தெரி­வித்­தார்.

சிட்­டி­பேங்க், யுஓபி, டிபி­எஸ் வங்­கி­க­ளைப்­போ­லவே கடன்­அட்­டை­களில் செலவு செய்­வது இவ்­வாண்டு தொடர்ந்து அதி­க­ரிக்கும் என ஓசி­பிசி எதிர்­பார்க்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!