ஒரு மாதமாக தேடப்பட்டு வந்த அம்ரித்பால் சிங் கைது

ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த சீக்­கிய பிரி­வினை­வா­தத் தலை­வர் அம்ரித்பால் சிங்கை இந்­தி­யக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­து உள்­ள­தாக பஞ்­சாப் மாநில காவல்­துறை அதி­காரி ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

பாகிஸ்­தான் எல்­லையை ஒட்­டிய பஞ்­சாப் மாநி­லத்­தில் சொந்த நாடு கோரிய இயக்­கத்­திற்கு எதி­ராக இந்தக் கைது நட­வ­டிக்கை இடம்­பெற்­றது.

பஞ்­சாப்­பில் அம்­ரித்­பால் சிங்­கின் எழுச்­சி­யால் சீக்­கி­யர்­களுக்கு காலிஸ்­தானை தனி நாடா­கக் கோரும் பேச்சு எழுந்­து உள்­ளது.

அத்­து­டன், 1980கள் மற்­றும் 1990களின் தொடக்­கத்­தில் சீக்­கி­ய கிளர்ச்­சி­யின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோ­ரின் உயிர்­க­ளைப் பறித்த வன்­முறை மீண்­டும் நிக­ழுமோ என்ற அச்­ச­மும் எழுந்­துள்­ளது.

பஞ்­சாப் காவல்­துறை உய­ர் அதிகா­ரி­யான திரு சுக்­செ­யின் சிங் கில், “உள­வுத்­து­றை­யின் அடிப்­ப­டை­யில் பஞ்­சாப் மாநி­லம், மோகா மாவட்­டத்­தில் உள்ள ரோட் கிரா­மத்­தில் அம்­ரித்­பால் சிங் கைது செய்­யப்­பட்­டார்,” என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

‘வாரிஸ் பஞ்­சாப் டி’ எனும் அமைப்பை வழி­ந­டத்­தும் அம்­ரித்­பால் சிங், 30, கடந்த மார்ச் மாத நடுப்­ப­கு­தி­யிலிருந்து தலை­ம­றை­வாக இருந்­தார்.

அவ­ரும் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­களில் நூற்­றுக்­க­ணக்­கா­னோ­ரும் கடந்த மாதம் துப்­பாக்­கி­கள், வாள்­க­ளு­டன் பஞ்­சாப் காவல் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு, அம்­ரித்­பால் சிங்­கின் உத­வி­யாளர்­களில் ஒரு­வரை விடு­விக்­கக் கோரி­னர்.

கொலை முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் சட்ட அம­லாக்­கத்­திற்கு இடை­யூ­றா­கச் செயல்பட்டதாகவும் ஒற்­று­மை­யைச் சீர்­கு­லைக்க முற்­பட்­ட­தா­க­வும் அம்­ரித்­பால் சிங் மற்­றும் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­கள் மீது காவல்­து­றை­யி­னர் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.

தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், ரோட் கிரா­மத்­தில் உள்ள சீக்­கி­ய கோயி­லில் அம்­ரித்­பால் சிங் கைது செய்­யப்­பட்­டாக திரு கில் தெரி­வித்­தார்.

தேசிய பாது­காப்­புக்கு மிரட்­ட­லாக விளங்­கு­வோரை ஓராண்டு வரை குற்­றம் சுமத்­தாமல் தடுப்புக்­காவலில் வைத்திருக்க இச்­சட்டம் வகை­செய்­கிறது.

அசாம் மாநி­லம், திப்­ரு­காருக்கு அம்­ரித்­பால் சிங் இட­மாற்­றம் செய்­யப்­ப­டு­வார் என்று திரு கில் தெரி­வித்­தார். அம்­ரித்­பால் சிங்­கின் உத­வி­யா­ளர்­களில் சிலர், அங்கு ஏற்­கெ­னவே சிறை­யில் அடைக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்­கி­டையே, பஞ்­சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்­றும் பொய்­யான, உறுதி செய்­யப்­ப­டாத தக­வல்­களை சமூக ஊட­கங்­களில் பரப்ப வேண்­டாம் என்­றும் பஞ்­சாப் காவல்­துறை கேட்­டுக்கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!