சூடானிலிருந்து இந்திய நாட்டவர்கள் வெளியேற்றம்

மோதல்­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்ள சூடா­னில் இருந்து இந்­திய நாட்­ட­வர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு நாட்­டுக் குடி­மக்­களை தான் வெளி­யேற்­றி­யுள்­ள­தாக சவூதி அரே­பியா அறி­வித்­துள்­ளது.

சவூதி வெளி­யு­றவு அமைச்­சு அறி­விப்­பின்­படி, அந்த நாடு­களைச் சேர்ந்த 66 குடி­மக்­கள் நேற்று முன்­தி­னம் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இந்­தியா, பாகிஸ்­தான், பங்­ளா­தேஷ், ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு­கள் உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த குடி­மக்­க­ளு­டன் 91 சவூதி நாட்­ட­வர்­களும் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் சவூதி வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

அரச சவூதி கடற்­ப­டை­யும் சவூதி ராணு­வ­மும் சேர்ந்து மீட்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டன. இந்த விவ­கா­ரத்­தில் சவூதி­யு­டன் இந்­தியா தொடர்­பில் இருந்து வரு­கிறது.

இந்­திய நாட்­ட­வர்­கள் சூடா­னில் இருந்து மீட்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்ய சவூதி வெளி­யு­றவு அமைச்­சரை இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் தொலைபே­சி­யில் அழைத்­துப் பேசி­னார்.

சூடா­னில் ஏறக்­கு­றைய 3,000 இந்­திய நாட்­ட­வர்­கள் இருப்­பதாக­வும் அவர்­களில் பெரும்­பாலா­னோர் தலை­ந­கர் கார்ட்டூமில் வசிப்­ப­தா­க­வும் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன. மேற்கு சூடா­னில் மோதல்­கள் நிக­ழும் டார்­ஃபர் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­லும் இந்­தி­யர்­கள் உள்­ள­னர்.

சூடான் ராணு­வப் படை­களுக்கும் துணை ராண­வப் படை­யான ‘ஆர்­எஸ்­எஃப்’க்கும் இடையே கடந்த ஒரு­வார கால­மாக மோதல் இடம்­பெற்று வரும் நிலை­யில், குடி­மக்­களைப் பாதுகாப்பாக வெளி­யேற்­றிய முதல் நாடாக சவூதி அரே­பியா விளங்­கு­கிறது.

இதற்­கி­டையே, சூடா­னில் இருந்து தனது தூத­ரக ஊழி­யர்களை வெளி­யேற்­றி­யுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. அர­ச­தந்­தி­ர­களை தான் வெளி­யேற்றி வரு­வ­தாக பிரான்ஸ் கூறி­யது.

கார்ட்­டூமில் உள்ள தனது தூத­ர­கத்­தில் செயல்­பா­டு­களை அமெ­ரிக்கா தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தா­கக் கூறிய அந்­நாட்டு அதி­பர் ஜோ பைடன், ஆனா­லும் சூடான் மக்­க­ளுக்கு உதவ அமெ­ரிக்கா தொடர்ந்து கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

சூடா­னில் சண்டை நிறுத்­தத்­திற்கு அவர் அழைப்பு விடுத்­த­போ­தி­லும், சூடான் ராணு­வப் படை­கள் அதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!