கோழி ஏற்றுமதி தடையை மலேசியா அகற்றுகிறது

மலே­சியா, அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து கோழி­கள் ஏற்று­ மதி செய்­வதை அனு­ம­திக்க விருக்­கிறது.

கோழி ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்ட தடை அகற்­றப்­படும் என்­றும் கோழி மற்­றும் முட்டை விலை­களை சந்தை நிர்­ண­யம் செய்ய அனு­ம­திக்­கப்­படும் என்­றும் அந்­நாட்­டின் வேளாண், உண­வுப் பாது­காப்பு அமைச்­சர் முஹ­மட் சாபு நேற்று தெரி­வித்­தார்.

கோழி ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்ட தடை விலக்­கப்­ப­டு­வ­தால் அதன் மூலம் விவ­சா­யி­கள் வரு­மா­னம் ஈட்ட முடி­யும் என்­றார் அவர்.

உயி­ருள்ள கோழி­கள், வெட்டி சுத்­தம் செய்­யப்­பட்ட கோழி­கள், கோழி பாகங்­கள் ஆகி­யவை ஏற்றும­திக்கு அனு­ம­திக்­கப்­படு கின்­றன. ஆனால் ஒரு நாளான கோழிக் குஞ்­சு­களை ஏற்­று­மதி செய்ய அனு­ம­தி­யில்லை.

மலே­சிய அர­சாங்­கம், கோழிப் பண்ணை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மானி­யத்­தை­யும் ஜூன் 30ஆம் தேதி­யோடு நிறுத்­து­வ­தாக தெரி­வித்­துள்­ளது.

“மானி­யம் நிறுத்­தப்­பட்­ட­தும் கோழி, முட்டை விநி­யோ­கம் நிலை­யாக இருப்­பது உறுதி செய்­யப்­படும்,” என்று நாடா­ளு­மன்­றத்­துக்கு எழுத்­து­பூர்­வ­மாக அளிக்­கப்­பட்ட பதி­லில் அமைச்­சர் சாபு தெரி­வித்­தார்.

கோழி விலையை சந்தை நிர்­ண­யித்­தா­லும் பண்­டிகை காலங்­களில் அவை அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க வரம்பு விதிப்­பது குறித்து ஆரா­யப்­படும் என்று அவர் கூறி­னார்.

பிரே­சில், சீனா, டென்­மார்க், தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து கோழி­களை இறக்­கு­மதி செய்ய அர­சாங்­கம் அனு­ம­திக்­கும் என்­றும் அமைச்­சர் முஹ­மட் சாபு கூறி­னார்.

முட்­டை­களை இறக்­கு­மதி செய்ய தாய்­லாந்து, உக்­ரேன் நாடு­களை மலே­சியா அங்­கீ­க­ரித் துள்­ளது.

மலே­சிய அர­சாங்­கம், கடந்த ஆண்டு கோழி மானி­யத்­துக்கு 369.5 மில்­லி­யன் ரிங்­கிட்டை (S$108 மில்­லி­யன்) ஒதுக்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!