பலரிடம் $9 மில்லியன் மோசடி; 424 பேரிடம் விசாரணை

நிதி மோசடி தொடர்­பில் காவல்­துறை இரண்டு வாரங்­க­ளாக வீசிய வலை­யில் 424 சந்­தேக நபர்­கள் சிக்­கி­யுள்­ள­னர்.

அவர்­களில் ஆக இளை­ய­வரின் வயது 16. பல­த­ரப்­பட்ட 1,400 மோசடி சம்­ப­வங்­கள் தொடர்­பில் சந்­தேக நபர்­க­ளுக்கு வலை வீசி­ய­தாக நேற்று காவல்­துறை தெரி­வித்­தது.

விசா­ர­ணை­யின்­கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ள 424 பேரில் 277 பேர் ஆண்­கள், 147 பேர் பெண்­கள். ஏறக்­கு­றைய ஒன்பது மில்­லி­யன் வெள்­ளியை அவர்­கள் ஏமாற்­றி­யி­ருப்­ப­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

சந்­தேக நபர்­க­ளின் வயது 16 முதல் 78 வரை­யி­லா­கும்.

வேலை வாங்­கித் தரு­வது, இணை­யம் வழி பொருள்­களை விற்­ப­தா­கக் கூறி ஏமாற்­று­வது, மோசடி இணை­யத்தள மோசடி, அர­சாங்க அதி­கா­ரி­போல நடித்து ஏமாற்­று­வது, முத­லீட்டு மோசடி உள்­ளிட்ட பல்­வேறு மோச­டி­களில் சந்­தேக நபர்­கள் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

மே 27ஆம் தேதி­யி­லி­ருந்து ஜூன் 8ஆம் தேதி வரை வர்த்­தக விவ­கா­ரப் பிரி­வும் ஏழு காவல்­ நிலை­யங்­களும் கூட்டாக மேற்­கொண்ட தொடர் சோத­னை­யில் சந்­தேக நபர்­கள் வலை­யில் வீழ்ந்­த­னர்.

ஏமாற்று, கள்­ளப்­ப­ணத்தை நல்ல பண­மாக மாற்­று­தல் உள்­ளிட்ட குற்­றச் செயல்­க­ளின் தொடர்­பிலும் சந்­தேக நபர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வருகின்றனர்.

மோச­டி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்று காவல்­துறை நேற்று எச்­ச­ரித்­தது.

குற்­றச்­செ­யல்­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க வேண்­டு­மா­னால் வங்­கிக் கணக்­கு­க­ளைப் பயன்­ ப­டுத்த அனு­மதி கேட்­டால் பொது­மக்­கள் நிரா­க­ரிக்க வேண்­டும் என்­று அது நினை­வூட்­டி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!