‘சிங்கப்பூரர்கள் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்’

அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யின்றி ஒரு­வர் தேந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கும் வாய்ப்பு வழங்க வேண்­டும் என்று போட்­டிக் களத்­தில் இறங்­கி­யுள்ள தொழில் முனை­வர் ஜார்ஜ் கோ கூறி உள்­ளார். இந்­தப் போட்­டி­யில் போட்­டி­யிட தமக்­கும் தகுதி இருக்­கிறது என்­றும் அவர் நம்­பிக்கை தெரி வித்­தார்.

நொவீனாவில் உள்ள தேர்­தல் துறை­யில் நேற்று காலை பத்து மணி­ய­ள­வில் அவர் தகு­திச் சான்­றி­த­ழுக்­கான விண்­ணப்­பப் படி­வத்­தைப் பெற்­றுக் கொண்­டார். அவ­ரது மனைவி லைசா சுமா­லி­யும் நான்கு பிள்­ளை­களும் அவ­ரு­டன் வந்­தி­ருந்­த­னர்.

அரை மணி நேரத்­துக்கு முன்­பாக சிவப்பு ‘டீ’ சட்டை அணிந்த ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் அங்கு கூடி யிருந்­த­னர்.

பொருள்­களை விநி­யோ­கிக்­கும் நிறு­வ­ன­மான ஓசியா இண்­டர் நேஷ­னல் குழு­மத்­தின் நிர்­வா­கத் தலை­வ­ரான திரு கோ, 63, கடந்த ஐந்து அதி­பர் தேர்தல் களில் மூன்று முறை போட்­டி­யின்றி நடந்­துள்­ளது என்று குறிப்­பிட்­டார்.

வரு­கின்ற அதி­பர் தேர்­த­லி­ ­லா­வது மக்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வாய்ப்பு இருக்க தாம் விரும்பு வதாக அவர் சொன்­னார்.

“என் வாழ்க்­கை­யைத் தொடங்­கி­ய­போது என்­னி­டம் ஒன்­றுமே இல்லை.

“ஆனால் எனக்கு இந்த நிலம் அதி­கம் கொடுத்­துள்­ளது. இப்­போது நாட்­டுக்­குச் சேவை­யாற்ற நேரம் வந்­துள்­ளது,” என்று ஜார்ஜ் கோ மேலும் கூறி­னார்.

அர­சாங்க நிறு­வ­னம் அல்­லது அர­சி­யல் கட்­சித் தொடர்பு இல்­லாத தனிப்­பட்ட தொழில் முனை­வ­ராக தாம் முன்­னே­றி­யுள்­ளதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதி­பர் தேர்­த­லில் போட்டி யிடு­வ­தற்­கான தகு­தி­கள் குறித்து பேசிய அவர், தமக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக கணக்­காய்­வா­ளர், வழக்­க­றி­ஞர், நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய குழுவை அமைத்­துள்­ள­தா­கக் கூறி­னார்.

வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டும் தகுதி தமக்கு இருப்­ப­தா­க­வும் அவர் நம்­பிக்­கை­யோடு தெரி­வித்­தார். பல மாத ஊகங்­க­ளுக்­குப் பிறகு அதி­பர் தேர்­த­லில் போட்டி யிடு­வ­தாக கடந்த திங்­கள்­ கிழமை அறிக்கை வாயி­லாக திரு கோ தெரி­வித்­தார்.

இந்­தத் தேர்­த­லில் ஏற்­கெனவே போட்­டி­யி­டப் போவ­தாக மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­முக ரத்­னம் அறி­வித்­துள்­ளார். இத­னால் ஜூலை 7ஆம் தேதி கட்சி மற்­றும் அர­சாங்­கப் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து விலகுவதா­க­வும் அவர் ஜூன் 8ஆம் தேதி தெரி­வித்­தார்.

2017ஆம் ஆண்­டி­லி­ருந்து மொரோக்கோ தூத­ராக உள்ள திரு கோவும் அப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!