ஜோஸ்லின் சியாவுக்கு வலை

அமெ­ரிக்­கா­வில் நகைச்­சுவை நிகழ்ச்­சி­யொன்­றில் காணா­மல்­போன எம்­எச்370 விமா­னம் குறித்து கிண்­ட­லா­கப் பேசிய ஜோஸ்­லின் சியாவை மலே­சியா காவல்­துறை தேடி வரு­கிறது.

அவ­ரது இருப்­பி­டத்­தைக் கண்டு­பி­டிக்க அனைத்­து­லக காவல்­து­றை­யான இண்­டர்­போல் உதவி நாடப்­படும் என்று மலே­சிய காவல்­துறை ஐஜி அக்­ரில் சானி அப்­துல் சானி தெரி­வித்­துள்­ளார்.

இம்­மா­தம் 6ஆம் தேதி சமூக ஊட­கங்­களில் பதி­வேற்றப்­பட்ட 89 விநாடி காணொ­ளி­யில் சிங்­கப்­பூ­ரை­விட மலே­சியா பின்­தங்­கி­யுள்­ளது என்று அவர் கிண்­ட­லா­கப் பேசி­யி­ருந்­தார். 2014ல் பய­ணி­க­ளு­டன் காணா­மல்­போன விமா­னத்­தை­யும் அவர் கேலி­யா­கக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விமா­னத்­தில் பய­ணம் செய்­த­வர்­கள் அனை­வ­ரும் இறந்துவிட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வை­யும் மலே­சிய விமா­னத்­தை­யும் ஜோஸ்­லின் சியா கிண்­ட­லா­கப் பேசி­ய­தற்கு சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் உட்­பட பலர் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

சிங்கப்பூர் நகைச்சுவை கலை ஞரான குமாரும் கண்டித்திருந் தார். காணா­மல்போன விமா­னத்­தில் பய­ணம் செய்த ஊழி­யர் மற்­றும் பய­ணி­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் உற­வி­னர்­களும் மன­தைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் அவர் பேசி­யுள்ளதாகவும் கூறி­னர். சென்ற வெள்­ளிக்­கி­ழமை மலே­சி­யா­வில் உள்ள அமெ­ரிக்க தூத­ரத்­தின் முன் கூடிய 100க்கும் மேற்­பட்ட அம்னோ இளை­யர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்த நிலை­யில் ஜோஸ்­லின் சியாவை மலே­சிய காவல்­துறை தேடத் தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!