வீடுகளில் சோதனை; என்ன தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை என்கிறார் செந்தில் பாலாஜி

தமி­ழ­கத்தை ஆளும் திமுக அமைச்­ச­ர­வை­யில் முக்­கிய நப­ராக இருக்­கும் செந்­தில் பாலாஜி வீடு­கள் உட்­பட பல இடங்­களில் அம­லாக்­கத் துறை நேற்று அதிரடி சோதனைகளை நடத்­தி­யது.

இதற்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­பட்­ட­தாக செந்­தில் பாலாஜி கூறி­யுள்­ளார்.

மின்­சா­ரம், ஆயத்­தீர்­வைத் துறை அமைச்­ச­ரான செந்­தில் பாலாஜி, அதி­முக ஆட்­சி­யில் 2011 முதல் 2015 வரை போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக இருந்­த­போது வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த வழக்­கின் தொடர்­பில் நேற்று திடீர் சோதனை நடை­பெற்­ற­தாக அம­லாக்­கத் துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

கரூர் ராமேஸ்­வ­ரப்­பட்­டி­யில் உள்ள அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் வீட்­டுக்கு ஐந்து கார்­களில் வந்த இரு­ப­துக்­கும் மேற்­பட்ட அதி­காா­ரி­கள் இரண்டு மணி நேரத்­துக்கு மேலாக சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அந்த வீட்­டில்­தான் செந்­தில் பாலா­ஜி­யின் பெற்­றோர் வசித்து வரு­கின்­ற­னர்.

கரூர் ராம­கி­ருஷ்­ண­பு­ரம் 2வது குறுக்­குத் தெரு­வில் உள்ள அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் தம்பி அசோக்­கு­மா­ரின் வீடு, மண்­மங்­க­லத்­தில் உள்ள அவ­ரது மாம­னார் வீடு, ராய­னூ­ரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யி­டம் முன்பு கணினி வேலை பார்த்த சர­வ­ணன், அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யி­டம் முன்பு நேர்­முக உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய வேலா­யு­தம்­பா­ளை­யத்­தில் உள்ள கார்த்தி ஆகி­யோர் வீடு­களில் சோதனை நடத்­தப்­பட்­டது.

ராமேஸ்­வ­ரப்­பட்­டி­யில் உள்ள அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் வீடு, அவ­ரது சகோ­த­ரர் அசோக்­கின் மாம­னார் வீடு, அமைச்­ச­ரின் முன்­னாள் ஊழி­யர்­கள் வீடு­களும் அதி­கா­ரி­களின் சோத­னை­யில் இருந்து தப்­ப­வில்லை.

சென்­னை­யில் அமைச்­ச­ரின் அரசு இல்­லம், பிஷப் கார்­டன் பகு­தி­யில் உள்ள அவ­ரது சகோ தரர் தங்­கி­யி­ருந்த வீடு மற்­றும் அலு­வ­ல­கத்­தில் நேற்று காலை அதி­கா­ரி­கள் சோதனை மேற்­கொண்­ட­னர்.

சோதனை நடந்­த­போது அமைச்­சர் வீட்­டில் இல்லை. நடைப் பயிற்­சிக்­காக வெளியே சென்­றி­ருந்­தார்.

சோதனை பற்றி கேள்­வி­யுற்ற அமைச்­சர் நடைப் பய­ணத்தை பாதி­யில் நிறுத்­திக்கொண்டு அவ­ச­ர­மாக வீடு திரும்­பி­னர்.

அப்­போது செய்­தி­யா­ளர்­கள் அவரை வழி­ம­றித்து சோதனை குறித்து கேள்விகேட்­ட­னர்.

இதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், எதைத் தேடு­கி­றார்­கள், என்ன நோக்­கத்­திற்­காக வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை என்­றார்.

ஆனால் சோத­னைக்கு முழு ஒத்­து­ழைப்பு கொடுப்­போம் என்­றார் அவர். இதே விவ­கா­ரம் தொடர்­பில் மே 26ஆம் தேதி அமைச்­ச­ரு­டன் தொடர்­பு­டைய 10க்கும் மேற்­பட்ட இடங்­களில் சோதனை நடத்தி சில ஆவ­ணங்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!