கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை; ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்

தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் மின்­சா­ரத்­துறை மற்­றும் மது­வி­லக்கு ஆயத்­தீர்வை துறை அமைச்­ச­ரா­க­வும் கரூர் மாவட்ட திமுக செய­லா­ள­ரா­க­வும் வி. செந்­தில் பாலாஜி உள்­ளார். இவ­ரது சகோ­த­ரர் பெயர் அசோக். சில நாள்க­ளுக்கு முன்பு அசோக், செந்­தில் பாலா­ஜி­யின் உற­வி­னர்­கள், நண்­பர்­கள், நெருக்­க­மான ஒப்­பந்­த­தா­ரர்­கள், தொழி­ல­தி­பர்­க­ளின் வீடு­களில் வரு­மான வரி சோதனை நடந்­தது. இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் அமைச்­சர் செந்­தில் பாலா­ஜி­யின் வீடு­களில் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

சென்­னை­யி­லும் கரூர் அரு­கே­யுள்ள ராமேஸ்­வ­ரப்­பட்­டி­யி­லும் உள்ள அவ­ரது வீடு­கள் மற்­றும் தலைமை செய­ல­கத்­தில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில் சோதனை நடத்­தப்­பட்­டது. கரூர் ராம­கி­ருஷ்­ண­பு­ரத்­தில் உள்ள அவ­ரது தம்பி அசோக் வீடு, ராய­னூர் பகு­தி­யில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்­பட 8 இடங்­களில் அம­லாக்­கத் துறை­யி­னர் பல மணி நேரம் சோதனை நடத்­தி­னர். இந்த சோத­னை­க­ளின் முடி­வில் நேற்று அதி­கா­லை­யில் அமைச்­சர் செந்­தில் பாலா­ஜியை அம­லாக்­கத்­து­றை­யி­னர் விசா­ர­ணைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

அப்­போது நெஞ்­சு­வலி என கூறி­னார். அத்­து­டன் வலி­யால் அவர் துடித்­த­தாக ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன. இதை­ய­டுத்து செந்­தில் பாலா­ஜியை சென்னை ஓமந்­தூ­ரார் பன்­னோக்கு மருத்­து­வ­மனை­யில் அனுமதித்தனர். பின்­னர் அங்கு அவரை கைது செய்­த­னர். செந்­தில் பாலா­ஜிக்கு ‘ஆஞ்­சி­யோ­கி­ராம்’ பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தில் அவ­ரது ரத்­தக்­கு­ழா­யில் மூன்று அடைப்­பு­கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. எனவே, உட­ன­டி­யாக ‘பைபாஸ்’ அறுவை சிகிச்­சைக்கு மருத்­து­வர்­கள் பரிந்­துரை செய்­த­னர். அத­னைத் தொடர்ந்து காவேரி மருத்­து­வ­ம­னை­யில் செந்­தில் பாலா­ஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவ­ரது குடும்­பத்­தி­னர் முடி­வெ­டுத்­த­னர்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சைகளைத் தொடரவும் அவர் அனுமதி அளித்தார்.

முன்­ன­தாக, மருத்­து­வ­மனை சென்று செந்­தில் பாலா­ஜி­யைச் சந்­தித்த முதல்­வர் மு.க. ஸ்டா­லின் பின்­னர் டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார்.

“விசா­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்பு தரு­கி­றேன் என்று சொன்ன பிற­கும் வழக்­கிற்­குத் தேவை­யான சட்ட நடை­மு­றை­களை மீறி மனி­த­நே­ய­மற்ற முறை­யில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நடந்துகொண்­டி­ருப்­பது தேவையா?,” என்று ஸ்டா­லின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதி­முக தவிர பெரும்­பா­லான அர­சி­யல் கட்­சி­களும் இந்­திய அள­வில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட சில எதிர்க்­கட்­சி­களும் செந்­தில் பாலாஜி மீதான நட­வடிக்­கை­யைக் கண்­டித்­துள்­ளன.

அதே­நே­ரம், உச்­ச நீ­தி­மன்­றத்­தின் உத்­த­ர­வின்­ப­டியே அமைச்­சர் செந்­தில் பாலா­ஜியை அம­லாக்­கத்­துறை கைது செய்­தது என்­றும் கைது செய்­யப்­பட்ட நபரை முதல்­வர் நேரில் சென்று பார்த்­தது கண்­டிக்­கத்­தக்­கது என்­றும் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

செந்­தில் பாலா­ஜியை அமைச்­சர் பத­வியி­லி­ருந்து நீக்க வேண்டு­மென முன்­னாள் அதி­முக அமைச்­ சர் ஜெய­கு­மார் கூறியுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!