உக்ரேன் தகவல்: ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த வெடிமருந்து கிடங்கை அழித்துவிட்டோம்

உக்­ரே­னின் தெற்கு வட்­டா­ர­மான கெர்­ச­னில் உள்ள ஹெனி­செஸ்க் என்ற துறை­முக நக­ரில் ரஷ்ய கட்­டுப்­பாட்­டில் இருந்த வெடி­மருந்து கிடங்கு ஒன்றை அழித்து­விட்­ட­தாக உக்­ரேன் தெரி­வித்து இருக்­கிறது.

“காலை நேரத்­தில் எங்­க­ள் ராணு­வத்­தி­னர் ரஷ்யாவுக்கு வச­மாக அடி­கொடுத்­து­விட்­ட­னர்,” என்று ஒடெசா வட்­டார ராணுவ நிர்­வா­கம் தெரி­வித்­தது.

“அந்த நக­ரில் மிக­வும் குறிப்­பி­டத்­தக்க வெடி­ம­ருந்து கிடங்கு ஒன்று செயல்­பட்டு வந்­தது. அந்­தக் கிடங்கு இப்­போது அழிக்­கப்­பட்­டு­விட்­டது,” என்று ராணு­வத்­தள நிர்­வாக அதி­காரி பிராட்­சுக் கூறி­னார்.

இத­னி­டையே, இந்­தத் தக­வலை தனிப்­பட்ட முறை­யில் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது. வெடி­ம­ருந்து கிடங்கு அழிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்படுவதன் தொடர்­பில் ரஷ்ய தரப்­பி­டம் இருந்து எந்­தத் தக­வ­லும் இல்லை.

உக்­ரே­னிய ஊட­கங்­கள் பல காணொ­ளி­களை வெளி­யிட்­டன. பெரும் சத்­த­மும் அதைத் தொடர்ந்து பெரும் புகை­யும் ஓரி­டத்­தில் இருந்து கிளம்­பி­யதை அந்­தக் காணொ­ளி­கள் காட்­டின.

அழிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­கக் கூறப்­படும் வெடி­ம­ருந்து கிடங்கு இருந்த இடத்­திற்கு ரைகோவ் என்று பெயர்.

அதை ரஷ்­யப் படை­கள் சென்ற ஆண்டு ஆக்­கி­ர­மித்­துக் கொண்­டன.

இத­னி­டையே, செயின்ட் பீட்­டர்ஸ்­பர்க் நக­ரில் ரஷ்ய அதி­பர் புட்­டி­னைச் சந்­தித்த தென் ஆப்­பி­ரிக்க அதி­பர் சிரில் ரம­போசா, உக்­ரேன் போர் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று ரஷ்ய அதி­ப­ரி­டம் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

இருதரப்புகளும் சிறைக் கைதிகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று திரு ரமபோசா வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!