மேற்குக் கரையில் இஸ்ரேல் எழுவரைக் கொன்றதாகத் தகவல்

ஜெருசலம்: மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் ஆறு பாலஸ்தீனர்களையும் குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய ஆடவரையும் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாண்டோரில் வயதுக்கு வராத இளையர்களும் அடங்குவர்.

சனிக்கிழமை இரவிலும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். ஐவர் ஜெனின் நகரில் மாண்டனர்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் மேற்குக் கரையில் எதிர்பாரா விதமாக மோசமான தாக்குதல் நிகழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்குத் தொடர்புடையவர் என்று நம்பப்படுபவரைப் பிடிக்க இஸ்ரேலிய ராணுவம் ஜெனின் நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாகத் தகவல் வெளியிடவில்லை. ஜெனின் நகரில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பிணை பிடித்து வைக்கப்பட்டவர்களையும் சிறையில் இருப்போரையும் (இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள்) விடுவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து காஸாவில் போரை மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேலியத் தலைவர்கள் ஐயம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் ஹமாஸ் பிணை பிடித்து வைத்துள்ளோரில் 50 பேரை விடுவிக்கவேண்டும். அவர்களைத் தாண்டி அந்த அமைப்பு விடுவிக்கும் ஒவ்வொரு 10 பேருக்கும் கூடுதலாக ஒரு நாளுக்கு போரை நிறுத்த தயாராய் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும், ஆகக் கடைசி நிலவரப்படி ஹமாஸ் அதற்குப் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நான்கு நாள்களுக்குப் போரை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. ஐந்தாம் நாளும் அது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இஸ்ரேலின் அரசியல் கவனிப்பாளரும் முன்னாள் மூத்த அரசதந்திரியுமான அலொன் பின்காஸ் கூறினார்.

போர் நிறுத்தத்தை நீட்டித்தால் ஹமாஸ் அமைப்பினர் பிணை பிடித்து வைத்தோரில் கூடுதலானோர் விடுவிக்கப்படக்கூடும். அது இஸ்ரேல் மக்களுக்குக் கூடுதல் நிம்மதி தரும் என்று கூறப்படுகிறது. பிணை பிடித்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதையே அந்நாட்டு மக்கள் ஆக முக்கியமானதாகக் கருதுவது அதற்குக் காரணம்.

இது ஹமாசுக்குத் தெரியும் என்றும் அதைவைத்துத் தந்திரமாக போர் நிறுத்தத்தை நீட்டிக்குமாறு அந்த அமைப்பு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுக்கும் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கும் இஸ்ரேல் பாலிசி ஃபாரம் எனும் ஆய்வுக் குழு குறிப்பிட்டது.

அதேவேளை, தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவது ஹமாஸ் அமைப்பை ஒழிக்கவேண்டும் என்ற இஸ்ரேலின் இலக்குக்கு இடையூறாக அமையக்கூடும். அதன் மூலம் ஹமாஸ் மீண்டும் வலுவடைந்து கூடுதல் வீரியத்துடன் போரில் இறங்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

நான்கு நாள் தற்காலிகப் போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை நடப்புக்கு வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!