கிரைமியாவில் ரஷ்யக் கப்பலை அழித்ததாகக் கூறும் உக்ரேன்

கியவ்: உக்ரேனிய ஆகாயப்படை, கிரைமியக் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பலை அழித்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) கூறியுள்ளது.

முன்னதாக, கியவ்வின் தாக்குதலால் ஃபியோடோசியா துறைமுகத்தில் தீ மூண்டதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரைமியா ஆளுநர் கூறியதை அடுத்து உக்ரேன் இவ்வாறு கூறியிருக்கிறது.

“ரஷ்ய கடற்படை சுருங்கிக்கொண்டே வருகிறது. ஆகாயப் படை விமானிகளும் ஆகாயத் தாக்குதல் தொடர்பில் பணியாற்றுவோரும் சிறப்பாகப் பணியாற்றியதால் இது சாத்தியமானது,” என்று உக்ரேனிய ஆகாயப் படைத் தளபதி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். அதன் தொடர்பில் ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை.

உக்ரேனிய ஆகாயப்படை வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், ஃபெடோசிய துறைமுகத்தின் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சி தங்கள் விமானிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா கருங்கடல் பகுதியில் நிறுத்திவைத்துள்ள ‘நொவோசெர்காஸ்க்’ எனும் போர்க்கப்பல் அழிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்களை அது வெளியிடவில்லை.

அந்தத் தகவலை உடனடியாக உறுதிசெய்ய இயலவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.

போர்க்கப்பல் அழிக்கப்பட்டது குறித்து ரஷ்யா கருத்துரைக்கவில்லை.

உக்ரேன் எந்த ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது, எத்தனை ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன என்பன குறித்துத் தகவல் இல்லை.

முன்னதாக, உக்ரேனியத் தாக்குதலால் துறைமுகத்தில் தீ மூண்டதாகக் குறிப்பிட்ட ரஷ்ய தரப்பு ஆளுநர், பின்னர் அந்தத் தீ அணைக்கப்பட்டதாகக் கூறினார்.

நெருக்கடி நேரச் சேவைகள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சில வீடுகளிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றார் அவர்.

ரஷ்யா நியமித்துள்ள கிரைமியா நிர்வாகம், ‘தொழில்நுட்பக்’ கோளாற்றால் ஃபெடோசியாவிலிருந்து தற்போதைக்கு ரயில்கள் கிளம்பமாட்டா எனத் தெரிவித்தது. அந்நகரில் சாலைப் போக்குவரத்தும் சில இடங்களில் தடைபட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!