தைவான் தேர்தல்: மூன்று அரசியல் கட்சிகள் பேரணி

தைப்பே: தைவானில் சனிக்கிழமை நடைபெற இருக்கும் அந்நாட்டின் முக்கிய தேர்தலையொட்டி முக்கிய மூன்று அரசியல் கட்சிகள் பெரிய அளவில் ஊர்வலங்களை நடத்தி உள்ளன.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அந்தப் பேரணிகள் அதிபர் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பேராதரவை அளித்து உள்ளன.

தைவானில் சீனாவின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதன் விருப்பத்திற்கு எதிராக தேர்தல்கள் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தைவானில் முதல் நேரடி அதிபர் தேர்தல் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதல் அந்நாடு ஜனநாயகப் பாதையில் வெற்றிகரமான நடைபோட்டு வருகிறது.

ஆதிக்கப் போக்கிற்கும் ராணுவச் சட்டத்திற்கும் எதிராக பல ஆண்டுகளாக அந்நாடு போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.

ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி (டிபிபி), தைவானின் தனிச் சுதந்திரத்தின் அடையாளத்தைத் தூக்கிப் பிடிப்பதோடு சீனாவின் ஆதிக்க எண்ணத்தை முறியடித்து வருகிறது.

மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமரத் துடிக்கும் அந்தக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் லாய் சிங் டே அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு உள்ளார்.

ஆனால், லாய் ஒரு பயங்கரமான பிரிவினைவாதி என்று சீனா மீண்டும் மீண்டும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அத்துடன், பேச்சுவார்த்தை நடத்த லாய் விடுத்த அழைப்புகளைச் சீனா புறக்கணித்து வருகிறது.

தைவான் நீரிணையில் அமைதியைக் கட்டிக்காக்க தாம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறும் துணை அதிபர் லாய், பொய்யான தகவல்களைக் கூறி தேர்தலைச் சீர்குலைக்கும் முயற்சியில் சீனா இறங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், சீனாவின் புனிதப் பிரதேசம் என்று தைவானைக் குறிப்பிட்டுள்ள சீனா, அதன் மீது ராணுவ கெடுபிடிகளையும் பொருளியல் அழுத்தத்தையும் கொடுத்து வருகிறது என்றும் லாய் குறிப்பிட்டு உள்ளார்.

அதிபர் தேர்தலில் லாய்க்கு எதிராக இரண்டு முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான குவோமின்டாங் (கேஎம்டி) சார்பில் ஹோ யு யி என்பவரும் தைப்பே முன்னாள் மேயர் கோ வென் ஜேயும் அந்த எதிர்த்தரப்பு வேட்பாளர்கள். இரண்டாமவர், 2019ஆம் ஆண்டு புதிதாக உதயமான தைவான் மக்கள் கட்சி (டிபிபி) சார்பில் களமிறங்கி உள்ளார்.

இருப்பினும் லாய்க்கு அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தைவானின் அதிபர் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

ஏனெனில், இத்தேர்தலின் முடிவு அந்நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான எதிர்கால உறவை பாதிக்கும் என அவர்கள் எண்ணுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!