சிறிய நன்கொடையாளர் எண்ணிக்கையில் பைடனை முந்திய டிரம்ப்

நியூயார்க்: கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, அதிபர் ஜோ பைடனைவிட முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிகம் நிதி திரட்டியுள்ளார்.

நிதி திரட்டும் ஒட்டுமொத்த பிரசாரத்தில் அதிபர் பைடனுக்கு அடுத்தே டிரம்ப் வந்துகொண்டிருந்தார் என்றபோதும், சிறிய நன்கொடையாளர்கள் எண்ணிக்கையில் பைடனை டிரம்ப் முந்தினார்.

கூட்டாட்சி தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் நியூயார்க் டைம்ஸின் பகுப்பாய்வின்படி கிட்டத்தட்ட 668,000 நன்கொடையாளர்கள் டிரம்புக்கு யுஎஸ் $200க்கும் (270 சிங்கப்பூர் வெள்ளி) குறைவாக நன்கொடை அளித்துள்ளனர். திரு பைடனுக்கு 564,000 பேரே சிறிய தொகையை நன்கொடை கொடுத்துள்ளனர்.

இந்த முறை பெரும்பாலான பெரிய நன்கொடையாளர்கள் இதுவரையில் டிரம்பிடமிருந்து தள்ளியே இருக்கிறார்கள். மாறாக, அவர்களிடமிருந்து திரு பைடனுக்கு போதிய ஆதரவு கிடைத்துள்ளது. அந்தத் தரவு ஆய்வில் அப்பிரிவினர் இடம்பெறவில்லை.

வாக்காளர்களின் ஆதரவின் ஒரு அளவீடாக, சிறிய நன்கொடையாளர்களின் வலுவான பங்கெடுப்பு உள்ளது. தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மீண்டும் மீண்டும், ஒரு வேட்பாளரின் பிரசார நிதிக்கு யுஎஸ் $3,300 டாலர் வரையும், பொதுத் தேர்தலுக்கு யுஎஸ் $3,300 வரையும் கொடுக்கலாம்.

பென்சில்வேனியா, விஸ்கோன்சின், நார்த் கரோலினா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா ஆகிய முக்கியமான இடங்களில் பைடனைவிட டிரம்ப் அதிக சிறிய நன்கொடையாளர்களைக் கொண்டிருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் பகுப்பாய்வு காட்டுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!