‘கீமோதெரபி’ சிகிச்சை பெற்றுவரும் பிரிட்டிஷ் இளவரசி கேட்

லண்டன்: புற்றுநோய் பாதிப்பைத் தடுப்பதற்காக ‘கீமோதெரபி’ எனும் புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன் மார்ச் மாதம் 22ஆம் தேதி அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சை தொடர்பான மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் அது புற்றுநோய் தொடர்பானதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையில் அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இது தமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் வில்லியமின் மனைவியான 42 வயது இளவரசி கேட் தெரிவித்தார்.

தற்போது தமது உடல்நலம் தேறி வருவதாக அவர் காணொளி மூலம் கூறினார்.

இதற்கிடையே, இளவரசர் வில்லியமின் இளைய சகோதரரான இளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகனும் கேட் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இந்தச் சவால்மிக்க காலகட்டத்தை எதிர்கொள்ள அவருக்குத் தேவையான தனிமை கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!