‘அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபருக்கு விடுத்த அழைப்பாணையால் குழந்தைகள் மீட்பு’

கியவ்: நாடுகடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை மீட்பதற்கு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) ரஷ்ய அதிபர் புட்டினுக்கு கொடுத்த அழைப்பாணையே காரணம் என்று உக்ரேன் கூறியுள்ளது.

கத்தாரின் முயற்சியால் ஏற்பட்ட இணக்கத்தின் மூலம் நடந்த டிசம்பர் 6 அன்று, ரஷ்யா மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துவரும் பகுதிகளிலிருந்து 8 குழந்தைகள் உக்ரேனுக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டனர்.

போர்கால விதிமுறைகளுக்கு எதிராக குழந்தைகளை நாடுகடத்திய குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் மற்றொரு அதிகாரிக்கும் கொடுக்கப்பட்ட 2 அழைப்பாணைகள் சில குழந்தைகள் மீட்கப்படுவதற்கு உதவியுள்ளன என்று உக்ரேனின் மனித உரிமை ஆணையர் கூறினார்.

அதிபர் புட்டினுக்கும் குழுந்தைகள் குறைதீர்ப்பு அதிகாரி மரியா லவோவா பெலோவாவுக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் அழைப்பாணை விடுத்தது. உக்ரேனிய குழந்தைகளை கடத்திச்சென்ற குற்றத்துக்கு ஆணை விடுக்கப்பட்டது. ரஷ்யா குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் அனாதைகளாக விடப்பட்ட குழந்தைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கவே மனதாபிமான அடிப்படையில் செயல்பட்டுவருவாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வ தகவலின்படி, இதுவரை, நாடுகடத்தப்பட்ட 19,546க்கும் மேற்பட்ட குழந்தைகளில் 387 குழந்தைகள் ரஷ்யா மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக திரு டிமிட்ரோ லுபிநெட்ஸ் என்ற அந்த உக்ரேனிய மனித உரிமை ஆணையர் கூறினார்.

அடையாளங்களை மறைக்கவும் கண்டுபிடிப்பதில் மேலும் குழப்பம் ஏற்படுத்தவும் ரஷ்யா அதன் நட்பு நாடான பெலரூஸ் வழியாக குழந்தைகளை நாடுகடத்திவருவதாக உக்ரேனிய மனித உரிமை ஆணையர் விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!