தமிழ்மொழியில் பேசி அசத்தும் சீன இளையர்

சிறு வயதிலிருந்தே மொழிகளின் மேல் பேரார்வம் கொண்டு வளர்ந்த 22 வயதாகும் ஜோனஸ் ஃபைன் டான் வென் ஜெ தமிழ்மொழியில் பேசி, எழுதி அசத்துகிறார்.

தமிழ்மொழி உட்பட ஆங்கிலம், மாண்டரின், போர்த்துக்கீசியம், தாய்லாந்து, ஸ்பானிய, ஹொக்கியன், வியட்னாமிய, இத்தாலிய, தகலோக், மலாய் ஆகிய 11 மொழிகளில் பேசவும் எழுதவும் நன்கு கற்றுத் தேர்ந்துள்ள அவரின் அப்பா சீனர், அம்மா பெரனாக்கான்.

“மொழிகள் மிகவும் சுவாரசியமானவை. நான் சிறியதாக இருக்கும் போதே இந்த விசித்திரமான ஆர்வத்தை வைத்துக்கொண்டேன்.” என்று கூறியவாறே தமிழ்மொழியில் தனது உரையாடலை ஜோனஸ் தொடர்ந்தார்.

அப்பா மருத்துவராகவும், அம்மா தொழில்வழி சிகிச்சையாளராகவும் (Occupational Therapist) பணிபுரியவே, ஜோனஸ் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த தனது இல்லப் பணிப்பெண்ணோடு நேரத்தை அதிகம் போக்கி வளர்ந்தார்.

இல்லப் பணிப்பெண் ஆறுதலில் வளர்ந்து வந்த ஜோனஸ் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஜோனஸ் பிறப்பதற்கு முன்னரே அவருடைய பணிப்பெண் அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வந்தார். பணிப்பெண்ணுடன் பேசத் தொடங்கியதிலிருந்து தனது ஆறு வயதில் ஜோனஸ் தகலோக் மொழியில் பேசத் தொடங்கினார்.

15 வயதில் யூடியூபில் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அமெரிக்க ஆடவர் ஒருவர் பல மொழிகளில் பேசி மக்களை திகைக்க வைக்கும் காணொளி ஜோனஸின் மனதினில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்டது. தாமும் அவரைப் போல பேசவேண்டும் என்ற உந்துதல் இவருக்கு கிடைத்தது.

அன்று தொடங்கிய இவரது மொழிப்பயணம் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் மூன்று மொழிகளை ஏற்கெனவே நன்கு பேசவும் எழுதவும் கற்றுக்கொண்ட ஜோனஸ் எப்படியாவது தமிழ்மொழியை நன்கு கற்கவேண்டும் என்று முனைப்புடன் இருந்தார்.

வெறும் மொழி கற்றல் செயலிகள் மூலமும், யூடியூப் காணொளிகள் மூலமும் இவரது தமிழ்மொழி கற்றல் ஆரம்பித்தது. முதலில் அவர் அடிப்படை இலக்கணத்தை தெரிந்து கொண்டார். தமிழ் எழுத்துக்களைப் படிப்படியாக கற்க, ஜோனஸ் தமிழில் எழுத விரும்பினார். எழுத்துக்களைக் கூட்டி படிக்கத் தொடங்கி அவர் தமிழ் வாக்கியங்களைப் பிழையின்றி மெதுவாக படிக்கத் தொடங்கினார்.

முதியோர் இல்லத்தில் தொண்டாற்றியபோது அங்கிருந்த ஒரு தமிழ் மூதாட்டியுடன் தமிழில் பேச கிடைத்த வாய்ப்பை ஜோனஸ் நினைவுகூர்ந்தார்.

ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளியில் பயின்றபோது உறுதிமொழியை நான்கு அதிகாரத்துவமொழிகளில் கூற வேண்டிய அனுபவமும் அவருக்கு கைகொடுத்தது.

பார்ப்பதற்கு வியப்பூட்டும் வகையில் ஜோனஸ் பெருவிரைவுப் போக்குவரத்து ரயில் நிலையங்களின் பெயர்களைத் தமிழில் உச்சரித்து பயிற்சி மேற்கொள்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது உயிர்த் தோழியுடன் பேசும் போதெல்லாம் சிறிது நேரம் தமிழில் பேசிவிட்டுத்தான் பிறகு ஆங்கிலத்தில் உரையாடலை ஜோனஸ் தொடர்கிறார். அவ்வாறு ஜோனஸின் தமிழ் நண்பர்கள் பெரும்பாலும் அவருக்கு அவ்வப்போது தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்துகின்றனர்.

ஜோனஸ் இதோடு மட்டும் நிறுத்தாமல், தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்க தமிழ்ப் படங்களைப் பார்ப்பதையும் தமிழ் பாடல்களைக் கேட்பதையும் பழக்கமாக வைத்துள்ளார். அவருக்குப் பிடித்த தமிழ் படம் ‘போகன்’ என்றும் பிடித்த தமிழ் பாட்டு ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்றும் பகிர்ந்துகொண்டார். தனது ஆற்றலைக் கண்டு பலர் வியந்துபோவதாக கூறிய ஜோனஸுக்கு தமிழ்மொழியைக் கற்க கடினமாகவே இருந்தது.

சொல்லகராதி (vocabulary), இலக்கணம் போன்றவற்றில் இன்னமும் சவால்களைச் சந்திக்கிறார். “தென்கிழக்கு ஆசிய மொழிகளைக் கற்பது மிகக் கடினம். அதில் தமிழ்மொழியைக் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இருப்பினும் எனக்கு இது பிடித்திருக்கிறது.” என்றார் ஜோனஸ்.

மொழி ஆர்வத்தைப் பறைசாற்றும் விதமாக ஜோனஸ் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உளவியலிலும், மொழியியலிலும் (linguistics) இளநிலைப் பட்டம் பயின்று வருகிறார்.

இங்கிலாந்தில் அதிக போலந்து மக்கள் இருப்பதால் ஜோனஸ் அடுத்து போலிஷ் மொழியைக் கற்கவுள்ளார். தமிழ்மொழி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி என்ற ஜோனஸ், இதற்கு அப்பாற்பட்டு நேரம் கிடைக்கும்போது ரஷியன், கொரிய மொழி, மங்கோலியன் ஆகிய மொழிகளில் கையெழுத்துப் படிவங்களும் (scripts) எழுதுகிறார்.

தமிழ்க் கலாசாரம் மீதும் ஆர்வம்கொண்ட ஜோனஸ் கோவில்களுக்குச் செல்வது, பொங்கல் கொண்டாடுவது போன்றவற்றில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறார்.

வருங்காலத்தில் முனைவர் பட்டக்கல்வி பயின்று பேராசிரியராக வேட்கை கொண்டுள்ளார் ஜோனஸ். சிங்கப்பூரில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் ஒன்றில் சேர்ந்து உள்ளூர் மாணவர்களுக்கு மொழி ஆர்வத்தை விதைக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் இலக்கு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!