தான்யா: நிஜத்திலும் நான் அப்படிப்பட்ட பெண்தான்

‘லேபிள்’ இணையத் தொடரில் நடித்தது மிக அருமையான அனுபவம் என்கிறார் நடிகை தான்யா ஹோப்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வரும் இவர் ரசிகர்களின் அன்புதான் தமது பலம் என்கிறார்.

“திரைத்துறையில் அண்மைக் காலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்திய அளவில் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக்கூடிய படமாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் அனைவருமே முனைப்பாக உள்ளனர்.

“இதனால் எனக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படவில்லை. அனைத்தையுமே எனது திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் கருதுகிறேன்.

“இனி எத்தகைய கனமான, மாறுபட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் வலுவாக உள்ளது.

“இதுவரை நான் நடித்த படங்களைப் பார்க்கும்போது பெருமைகொள்ள முடிகிறது. தமிழ் ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். நானும் அவர்களை நேசிக்கிறேன்.

“எனது முதல் படத்திலிருந்தே எனக்கான அடித்தளத்தைக் கச்சிதமாக அமைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதனால்தான் இப்போது என் வேலையை மகிழ்ச்சியாக செய்ய முடிகிறது,” என்கிறார் தான்யா ஹோப்.

திரை உலகில் வாய்ப்புகள் சூழ்ந்துள்ள அளவிற்கு போட்டியும் இருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள அவர், ஆழ்ந்த தியானம் இப்போட்டிகளைச் சமாளிக்கவும் தனது மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளார்.

என்ன நடக்கிறதோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது நல்லது என்றும் இவ்வாறு செயல்படவில்லை என்றால் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடும் என்றும் கூறுகிறார் தான்யா ஹோப்.

‘லேபிள்’ இணையத்தொடரை அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இதில் மகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தான்யா இயக்குநர் அருண்ராஜா காமராஜ் சிறு கட்டுப்பாட்டைக்கூட விதிக்கவில்லையாம். ஒரு கதாபாத்திரம், காட்சிக்கு எத்தகைய நடிப்பு தேவைப்படும் என்பதை நடிகர், நடிகையிடமே விட்டுவிடுவாராம்.

“ஒரு நடிகையாக முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். ஒரு இயக்குநருக்கான அதிகாரத்தை அவர் தன் கையில் எடுக்கவே இல்லை.

“ஒரு கதை, அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், கதையோட்டம் ஆகியவை எப்படி இருக்கும் என்பதை மிக எளிய முறையில் நமக்கு விவரிப்பார். நம்மிடம் உள்ள முழுத் திறமையையும் அவரால் வெளிக் கொண்டுவர முடிகிறது.

“அருண்ராஜா படம் என்றால் நம்முடைய உணர்வுகளையும் நடிப்பையும் எத்தகைய உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும்,” என்று சொல்லும் தான்யா, இத்தொடரின் கதாநாயகன் ஜெய்யுடன் இணைந்து நடித்ததும் நல்ல அனுபவம் என்கிறார்.

இனிமையானவர், பொறுமைசாலி, கடும் உழைப்பாளி என்பதெல்லாம் ஜெய்க்கு இந்த இளம் நாயகி அளிக்கும் பாராட்டுப் பத்திரங்கள்.

“படப்பிடிப்பின்போது அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பும் சூழ்நிலையும் அமையவில்லை. இருவருக்குமே கனமான பாத்திரம் என்பதுடன் மிக அழுத்தமான கதை என்பதால் அதுகுறித்து சிந்திப்பதற்கே நேரம் சரியாக இருந்தது,” என்கிறார் தான்யா.

‘லேபிள்’ படத்தில் இவர் ஏற்று நடித்த மகிதா பாத்திரத்தை வெகுவாக ரசித்தாராம். காரணம், நிஜ வாழ்க்கையில் மகிதாவைப் போல்தான், தாம் செயல்படுவதாகச் சொல்கிறார்.

“செய்தியாளர் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு நடித்துள்ளேன். இந்த இணையத்தொடரில் மகிதா தனது சொந்தக் காலில் நின்று தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள நினைக்கும் சுதந்திரப் பெண்ணாக சித்திரிக்கப்பட்டுள்ளார். நிஜத்தில் நானும் அப்படிப்பட்ட பெண்தான்,” என்கிறார் தான்யா.

வாழ்நாள் முழுவதும் நடிகையாக நீடிக்க விரும்புவதாகவும் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாள்களில் இந்த எண்ணத்தை முழுமையாக செயல்படுத்த விரும்புவதாகவும் சொல்கிறார்.

விளம்பரம், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர். ‘மிஸ் கோல்கத்தா’ அழகிப்போட்டியில் வாகை சூடியவர். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்று வரை சென்றவர். ‘தடம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்போது பல மொழிகளிலும் நடித்து வருகிறார் தான்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!