நடைமுறையை மாற்றி அமைக்கும் படம்: நித்யா

நல்ல கதைகளைத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நித்யா மேனன்.

அந்த வகையில் அறிமுக இயக்குநர் காமினி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘டியர் எக்ஸஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கற்பனை கலந்த காதல் கதையுடன் உருவாகும் இப்படத்தில் பிரதிக், வினய் ராய், நவ்தீப், தீபக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

அதில், மஞ்சள் நிறப் புடவையில், குளிர் கண்ணாடியுடன் காணப்படுகிறார் நித்யா. இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நித்யாவின் நடிப்பாற்றலை இப்படம் முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் காமினி. மேலும் வழக்கமான கதையம்சம் கொண்ட படமாக இது இருக்காது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இப்படத்தில் காதல், நட்பில் தோல்வி கண்ட விரக்தியான இளம் பெண் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

“வழக்கமாக ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியே காதலும் நகைச்சுவையும் கொண்ட கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த நடைமுறையை இப்படம் மாற்றி அமைக்கும்.

“நகைச்சுவைக் காதல் கதைகளில் நடிகைகளும் அருமையாக நடித்துப் பெயர் வாங்க முடியும்,” என்கிறார் நித்யா மேனன்.

“காதல்வயப்பட்டு பின்னர் சிக்கல்களை எதிர்நோக்கும் ஓர் ஆணின் இடத்தில் இளம் பெண்ணைக் கற்பனை செய்து பாருங்கள். ஆண்கள் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான சிக்கல்கள், போராட்டங்கள் ஆகியவற்றை இளம் பெண்களும் எதிர்கொள்கின்றனர்.

“வெறும் நகைச்சுவை, காதலை மட்டுமே மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கவில்லை. இளையர்களுக்கான நல்ல பல கருத்துகளையும் சொல்லி இருக்கிறோம். அதில் லேசான கற்பனையும் கலந்திருக்கும். படம் பார்க்கும்போது நான் குறிப்பிடும் இந்தக் கருத்து உண்மைதான் என்று தெரியும்.

“நான் கூறும் இந்த விவரங்களை வைத்து ‘டியர் எக்ஸஸ்’ படம் நாயகியை மையப்படுத்தும், பெண்களுக்கான படம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது,” என்கிறார் இயக்குநர் காமினி.

இது அனைவருக்குமான படம் என்றும் ஆண், பெண் என்ற வரையறையைக் கடந்து அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படமாக உருவாகி உள்ளது என்றும் கூறுகிறார் இயக்குநர் காமினி.

“நித்யா மேனனைப் பொறுத்தவரை ஒரு கதை எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறதோ அவை அனைத்தையும் கொடுக்கக்கூடியவர்.

“தாம் நடிக்கும் படமும் அதில் தனக்கான கதாபாத்திரமும் எத்தகையை நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை தன் மனதில் நன்கு உள்வாங்கிக்கொண்டு மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தும் நடிப்புத்திறன் கொண்டவர்.

“அதனால்தான் இந்தக்கதைக்கு அவர் பொறுத்தமானவராக இருப்பார் என முடிவு செய்தோம். அந்த முடிவை அவர் நியாயப்படுத்தி உள்ளார் என்கிறார்,” அறிமுக இயக்குநர் காமினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!