இரண்டாம் பாகங்களுக்குத் தயாராகும் கார்த்தி

விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்ற மூன்று வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க உள்ளார் நடிகர் கார்த்தி. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கார்த்தியைப் பொறுத்தவரை வணிக அம்சங்கள் நிறைந்த படங்களில் மட்டும் அல்லாமல் மாறுபட்ட கதைக்களங்கள், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் தலைநகரான கோடம்பாக்கத்தில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அந்த வகையில் மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது, ‘ஜப்பான்’ படத்தை அடுத்து ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் ‘மெய்யழகன்’, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளாராம் கார்த்தி.

அவரது நடிப்பும் ஒத்துழைப்பும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாக இரு இயக்குநர்களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க தயாராகி உள்ளார் கார்த்தி.

‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘சர்தார்’ ஆகிய அம்மூன்று படங்களும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றவை. இவற்றுள் ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் அவர் முதலில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

‘சர்தார்’ படம் குறித்து தொடக்கத்தில் சில மாறுபட்ட விமர்சனங்கள் வெளியாகின. எனினும் கார்த்தி இதுவரை நடித்த படங்களில் அதிக வசூல் கண்ட படமாக இது உருவெடுத்தது. இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இதே போல் ‘கைதி’ படம் மாறுபட்ட கதைக்களத்தால் வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ், கார்த்தியின் கூட்டணி ஒரு மாயாஜால அனுபவத்தை தந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்க உள்ளனவாம். இந்த மூன்று படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தனது சமூகப் பணிகளையும் கார்த்தி தீவிரப்படுத்தி உள்ளார். விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்துவது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் அவர் ஆலோசித்து சில முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது தொழில் ரீதியிலான செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு இல்லாத வகையில் சில நல்ல நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறார் கார்த்தி.

மிக விரைவில், அவரது சமூகப் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என்றும் அவற்றின் மூலம் ஏராளமானோர் பயனடைவர் என்றும் கார்த்திக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!