ராசிபலன்

cancer

கடகம்

இன்றைய பலன்:

சிலர் உங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம். எனினும் இன்று இறுதி வெற்றி உங்களுக்குத் தான். மாலைக்குள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9

நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள கடக ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். இடப்பெயர்ச்சிக்குப் பின் புதனின் பலம் கூடும். சூரியன், சுக்கிரனால் நலமுண்டு. செவ்வாய், குரு, சனி, ராகு, கேது வலுவிழப்பர்.

எதையும் திட்டமிட்டபடி செய்துமுடிக்கும் திறமைசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் உங்களது வருமான நிலை ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு மனநிறைவு அளிப்பதாக இருக்கும். வழக்கமான தொகைகள் கிட்டும் எனில் செலவுகளும் வழக்கம்போலவே அமைந்திடும். உழைப்புக்குரிய ஆதாயங்கள் கேட்டால்தான் கிடைக்கும். இவ்விஷயத்தில் கோட்டை விட்டுவிடாதீர்கள். பணிகள் குவிந்திருக்கும் நேரமிது. சில சமயங்களில் சாண் ஏறினால் முழம் சறுக்கும். எனினும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்றி நற்பெயரைத் தக்கவைக்கலாம். புது முயற்சிகள், பயணங்கள், மங்கலப் பேச்சுகள் ஆகியவற்றில் நிதானப்போக்கு தேவை. எது எப்படியோ, உடல்நலம் நன்றாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பணியாளர்கள், வியாபாரிகள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது. வார இறுதியில் உங்கள் மனம் மகிழும்படியான தகவல் தேடி வரக்கூடும்.

இல்லறச் சக்கரம் வழக்கம்போல் சுழலும். பெற்றோர் ஆதரவுண்டு.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 10, 11

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7