ராசிபலன்

capricorn

மகரம்

இன்றைய பலன்:

தேவை இல்லாமல் யாருடனும் மோதத் தேவையில்லை. இன்று தடைகளை மீறி முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள மகர ராசிக்­கா­ரர்­களே,

மாதக் கோள்களான புதன், சுக்கிரன் சிறப்பான இடங்களில் சஞ்சரிக்கின்றன. செவ்வாய், சனியருள் கிட்டும். குரு, ராகு, கேது, சந்திரன் வலுவிழப்பர். இடப்பெயர்ச்சிக்குப் பின் சூரியனின் மங்கலத்தன்மை கெடும்.

சூழ்நிலைக்கேற்ப செயல்படக்கூடிய சாமர்யத்தியசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். தற்போது சனிபலம் உள்ளது. எனவே, எதுகுறித்தும் யோசிக்காமல் நம்பிக்கையுடன் நடைபோடலாம். அடுத்துவரும் நாள்களில் உங்களது தனித்திறமைகள் பளிச்சிடும். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றுவீர்கள். வழக்கமான தடைகள் குறுக்கிட்டாலும் அவற்றைச் சமாளித்து முக்கியப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து ஆதாயங்கள், பாராட்டுகளைப் பெறுவீர்கள். வருமான நிலை நன்றாக இருக்கும். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவது உங்கள் பொறுப்பு. உடல்நலம் நன்றாக இருக்கும். ஓய்வின்றி உழைத்தாலும் சோர்வு தட்டாது. வழக்குகளில் சாதகப் போக்கு நிலவும். புது முயற்சிகள் முன்னேற்றம் காணும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரம் வெற்றி நடை போடும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும். இச்சமயம் பணம் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கப் பாருங்கள்.

குடும்ப நலன் தொடர்பிலான முயற்சிகள் முன்னேற்றம் காணும்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 13, 15

அதிர்ஷ்ட எண்கள்: 4, 8