ஜம்மு காஷ்மீரில் மாதாமாதம் நான்கு வீரர்கள் பலி

புதுடெல்லி: இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சின் புள்ளி விவரங்கள் மூலம் இது தெரியவருகிறது. கடந்த 2020 முதல் மொத்தம் 148 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் 11 பேர் உயிர் இழந்துவிட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்னாக் என்ற மாவட்டத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பலியானார்கள். பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

எல்லா புள்ளிவிவரங்களையும் கணக்கிட்டுப் பார்க்கையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒவ்வொரு மாதமும் நான்கு வீரர்களை இந்தியா இழந்து இருக்கிறது என்று நியூஸ்18 ஊடகம் தெரிவித்துள்ளது.

என்றாலும் ஜம்மு காஷ்மீரில் பலியாகும் பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கை நிலையாகக் குறைந்து வருகிறது. 2020க்கும் 2022க்கும் இடையில் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைந்துவிட்டது.

இந்தியா, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் குறைந்தபட்சம் 319 வீரர்களை இழந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீரர்கள் ஒருபுறம் இருக்க, 2020க்கும் 2023 ஜூலைக்கும் இடையில் ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சம் பொதுமக்களில் 105 பேர் கொல்லப்பட்டனர்.

அதே காலகட்டத்தில் இதர 15 பேர் பாதுகாப்பு வீரர்களால் மாண்டு விட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 43 மாதங்களில் பொதுமக்களில் மொத்தம் 120 பேர் கொல்லப்பட்டனர்.

கணக்கிட்டுப் பார்க்கையில் மாதா மாதம் மூன்று பேர் மாண்டு இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமக்களில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2018 ஜனவரி முதல் 2023 ஜூலை வரை பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் பொதுமக்களில் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டனர். இதர 35 பேர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது உயிர் இழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் மாதாமாதம் சராசரியாக பயங்கரவாதிகள் அரங்கேற்றிய 10 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2020 ஜனவரிக்கும் 2023 ஜூலைக்கும் இடையில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பிலான 410 சம்பவங்கள் பதியப்பட்டு உள்ளன.

கடந்த 2018 முதல் பயங்கரவாதம் தொடர்பில் கிட்டத்தட்ட 800 சம்பவங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜூலை வரை இந்த எண்ணிக்கை 30 ஆக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!