தோற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு வாய்ப்பு: பாஜகவின் புதிய உத்தி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சியைத் தக்கவைக்க பாஜக புதிய உத்தியைப் பயன்படுத்துகிறது. இதன்படி தோல்வியுற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களைப் போட்டியிட வைக்கிறது.

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி செய்கிறது. இங்கு நான்காவது முறையாக வென்று தனது ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டுகிறது.

அதற்காக, அக்கட்சி வெளியிட்டுள்ள 2 வேட்பாளர்கள் பட்டியலில் 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் தாக்கம் ஏற்பட்டு வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இதில் மேலும் ஒரு புதிய அரசியல் உத்தியை பாஜக கையாளுகிறது.

அதன்படி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தான் தோல்வியுற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தனது எம்.பி.க்களைப் போட்டியிட வைக்கிறது. இதனால் தனது கையைவிட்டு நழுவிய தொகுதிகளில் இந்த முறை வெற்றி கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இவர்களுடன் தனது கட்சியின் தேசியத் தலைவர்கள் சிலரையும் தோல்விடைந்த தொகுதிகளில் பாஜக நிறுத்துகிறது. இதன்மூலம் உட்கட்சி பூசலையும் பாஜக தடுத்த நிறுத்த முயல்கிறது.

கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுமுகங்கள் பலருக்கு பாஜக வாய்ப்பளித்தது. இதன் பிறகு அங்கு 6வது முறையாக வெற்றி பெற்று பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே குஜராத் அரசியல் சூத்திரத்தை மத்திய பிரதேசத்திலும் பாஜக அமலாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மத்திய பிரதேசத்தில் நேற்று வெளியான ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 24 மாநில அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக இந்த முறை எவரும் முன்னிறுத்தப்படவில்லை. எனினும் நான்காவது முறையாக மத்திய பிரதேச முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகானுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சவுகான் தனது புதினி தொகுதியில் போட்டியிடுகிறார். சபாநாயகர் கிரிஷ் கவுதம், கடந்த முறை வெற்றி பெற்ற தேவ்தலப்பில் போட்டியிடுகிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் வெற்றிக்காக பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!