காவிரி: நிரந்தர தீர்வு கோரும் தமிழகம்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை அக். 13) நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 16,000 கன அடிநீர் திறக்க வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலாண்மை ஆணையம் கூறியதை ஏற்று கர்நாடகம் தற்போது தண்ணீர் திறந்து வருகிறது என்று தெரிவித்த அவர், கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது என்றார். இன்னும் தமிழகத்துக்கு 0.4543 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் புதன்கிழமை (அக். 11) நடைபெற்றது. அதில், தமிழகத்துக்கு காவிரியில் அக்டோபர் 30ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னார்.

கர்நாடகா மாநிலத்தின் தலைக்காவிரியில் உற்பத்தியாகி பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது காவிரி.

காவிரி நதிநீரை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், குடிநீருக்காக லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் காவிரி நதிநீரினால் பயன் பெறுகின்றனர்.

தமிழக மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதந்தோறும் பிரித்து வழங்க வேண்டும். கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா. காவிரி நீர் பங்கீடு.. அதெல்லாம் தர முடியாது.. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டம் தமிழகத்தின் பங்கு தண்ணீரை பெற போராடி வருகிறது தமிழகம். ஆனாலும் தண்ணீரை தராமல் அடம் பிடிக்கிறது கர்நாடகா மாநிலம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!