குஜராத் முதலமைச்சரை சிங்கப்பூரில் சந்தித்த வணிகத் தலைவர்

‘யுனிவர்சல் சக்சஸ் எண்டர்பிரைசஸ் (யுஎஸ்இஎல்) சிங்கப்பூர்’ தலைவர் திரு பிரசூன் முகர்ஜி, சிங்கப்பூருக்கு வந்திருந்த குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலைச் சந்தித்தார்.

டிசம்பர் 1ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு ஷங்ரிலா ஹோட்டலில் இச்சந்திப்பு நடந்தது.

திரு முகர்ஜி, குஜராத்தில் 250 மெகாவாட் சூரிய மின்சக்திக் கூடத்தை அமைப்பதற்கு ‘யுஎஸ்இஎல்’ குழுவின் ஆர்வத்தை குஜராத் முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

1,250 ஏக்கர் நிலப்பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ள கூடம், உருவாக்கத்திலும் பராமரிப்பிலும் செயல்பாட்டிலும் நிர்வாகத்திலும் உலகத் தரம்வாய்ந்ததாக இருக்கும் என்று ‘யுஎஸ்இஎல்’ குழு கூறியது.

1,150 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடு அடிப்படையிலான இக்கூடம், கட்டுமானப் பணி நிறைவடைந்ததும் 7,500க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கித் தரும் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தலைமையகம் கொண்டு செயல்படும் பல்துறைக் கூட்டு வணிகம், ‘யுஎஸ்இஎல்’ குழு.

இந்தியா, தென்கிழக்காசியாவில் மாநகர் உருவாக்கம், தொழில்துறை மற்றும் தளவாடக் கூடங்கள், தரவு நிலையங்கள், வணிக மற்றும் தகவல் தொழில்நுட்பக் கூடங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி, விருந்தோம்பல் ஆகிய துறைகளில் செயலாற்றிவருகிறது ‘யுஎஸ்இஎல்’ குழு.

குஜராத் முதலீட்டுக் கூட்டம்

இதற்கிடையே சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை (சிக்கி) ஏற்பாடு செய்திருந்த குஜராத் முதலீட்டுக் கூட்டத்தில் முதலமைச்சர் பட்டேல் பங்கேற்றார். 

‘சோஃபிடெல் சிங்கப்பூர் சிட்டி செண்டர்’ ஹேட்டலில் இந்நிகழ்ச்சி டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் 100க்கும் அதிகமான வர்த்தகங்களும் அங்கம் வகித்தன.

குஜராத் மாநில நிதி நடுவமான அனைத்துலக நிதித்துறை தொழில்நுட்ப நகரத்திற்கு சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சிகளைப் பற்றி ‘சிக்கி’ தலைவர் நீல் பரேக் இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.  

“நிதித் தொழில்நுட்பம், பசுமை சக்தித்துறை, புதுப்பிக்கத்தக்க சக்தி, நிதித்துறை ஆய்வு உள்ளிட்ட முதலீட்டுகளுக்கு குஜராத்தில் நிறைய இடம் உள்ளது. இத்துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. செய்வதற்கு இன்னும் நிறைய உள்ளது,” என்று அவர் கூறினார்.

(கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!