ஈஸ்வரன்மீது 27 குற்றச்சாட்டுகள்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்மீது 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஈஸ்வரன் மறுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை எதிர்த்து வழக்கு கோர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு முன்னதாக இந்தக் குற்றச்சாட்டுகள் அவர்முன் வாசிக்கப்பட்டதாக நீதிமன்ற அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், ஜனவரி 18ஆம் தேதி காலை 8 மணி அளவில் நீதிமன்றத்தை வந்தடைந்தார்.

அவருடன் அவரது வழக்கறிஞர் குழுவும் இருந்தது. ஈஸ்வரனைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குழுவில் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங்கும் ஒருவர்.

அப்போது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் ஈஸ்வரனை அணுகியபோது அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

அரசாங்கத் தரப்பில் தலைமை அரசாங்க வழக்கறிஞர் டான் கியட் ஃபெங் முன்னிலையானார். அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர்களான ஜியாங் கெ யூவும் கெல்வின் சோங்கும் அவருக்கு உதவுகின்றனர்.

அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

ஈஸ்வரன் எதிர்நோக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள், செல்வந்தர் ஓங் பெங் செங்குடன் தொடர்புடையவை. ஓங் 2008ஆம் ஆண்டில் எஃப் 1 கார் பந்தயத்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தவர்.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓங்கிடமிருந்து ஈஸ்வரன் ஏறத்தாழ $145,434 பெற்றதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்துக்கும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துக்கும் இடையிலான ஒப்பந்தம், ஓங்கின் வர்த்தகத்துக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அத்தொகை ஈஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஓங்கிடமிருந்து $20,848.03 தொகையை ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியராக இருந்தபோதும் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஈஸ்வரன், மொத்தம் $218,058.95 பெறுமானமுள்ள பொருள்களை பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

‘ஹேரி போட்டர் அண்ட் தி கர்ஸ்ட் சைல்ட்’ போன்ற நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை ஓங்கிடமிருந்து ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, 2015ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கும் எவர்ட்டனுக்கும் இடையிலான காற்பந்துப் போட்டியை நேரில் காண இரண்டு நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அந்த நுழைவுச்சீட்டுகளுக்கான விலை 468 பவுண்டு (S$1006.06).

2017ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்திற்கான 10 கிரீன் ரூம் நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த நுழைவுச்சீட்டுகளின் மொத்த மதிப்பு $42,265.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்திற்கான 13 நுழைவுச்சீட்டுகளை அவர் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $16,744.

ஈஸ்வரன் வாங்கியதாகக் கூறப்படும் சலுகைகளில் ஓங்கிற்குச் சொந்தமான விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கத்தார் தலைநகரம் தோஹாவுக்குப் பயணம் செய்ததது (ஏறத்தாழ $10,410.40), தோஹாவில் உள்ள ஃபோர் சீசன்ஃஸ் ஹோட்டலில் ஓர் இரவு தங்கியது (ஏறத்தாழ $4737.63), தோஹாவிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தின் வர்த்தகப் பிரிவில் பயணம் மேற்கொண்டது (ஏறத்தாழ $5,700) முதலியவை அடங்கும்.

கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதியன்று நீதித்துறை நடவடிக்கையில் குறுக்கிட்டதாகவும் ஈஸ்வரன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வேறொரு விவகாரம் குறித்த விசாரணை தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று 61 வயது ஈஸ்வரன், லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!