ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக ஹோ சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, 2023ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் வர்த்தகம், தொண்டூழியம், அறிவியல், அரசியல் போன்ற துறைகளில் பிரபலமாக விளங்கும் பெண்கள் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டிலிருந்து ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டு வரும் இந்தப் பட்டியலில் திருவாட்டி ஹோ சிங் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஆனால் 2022ஆம் ஆண்டைவிட இவ்வாண்டு அவர் இரண்டு இடங்கள் முன்னேறி 33வது இடத்தைப் பிடித்துள்ளார்.

எழுபது வயது திருவாட்டி ஹோ சிங், தெமாசெக் ஹோல்டிங்சின் ஒட்டுமொத்த நன்கொடைகளுக்கு பொறுப்பு வகிக்கும் தெமாசெக் அறக்கட்டளையின் தலைவராக இருக்கிறார்.

இதற்கு முன்பு 2004 முதல் 2021 வரை சிங்கப்பூரின் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான தெமாசெக் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாகியாகவும் அவர் இருந்துள்ளார்.

அவரது நிர்வாகத்தின்கீழ் தெமாசெக் ஹோல்டிங்சின் முதலீட்டு நிதி 313 பில்லியன் யுஎஸ் டாலருக்கு அதிகரித்தது என்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்தது.

“2018ஆம் ஆண்டில் சான் ஃபிரான்சிஸ்கோவில் புதிய அலுவலகத்தை திறந்த ஹோ சிங், தெமாசெக்கின் கால் பங்கு நிதியை அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்வர்த்தகம் ஆகியவற்றில் முதலீடு செய்தார்,” என்று அது மேலும் கூறியது.

டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் மற்றொரு சிங்கப்பூரரான ஜெனி லீயும் இடம் பிடித்துள்ளார்.

இவர், ஜிஜிவி கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளி. இதுவும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் உலகளாவிய நிறுவனமாகும். 2022ஆம் ஆண்டில் 78வது இடத்தில் இருந்த இவர், 97வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.

“கல்வி-தொழில்நுட்பம், இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் திருவாட்டி ஜெனி லீ, 51, அதிவேகமாகச் செயல்பட்டவராகக் கருதப்பட்டவர்,” என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

2012ல் ‘மைடாஸ்’ எனும் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த முதல் பெண் ஜெனி லீ.

‘மைடாஸ்’ பட்டியலில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வருடாந்திர அதிக சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் இடம்பிடிக்கின்றனர்.

இவ்வாண்டின் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய ஒன்றியத்தின் டாக்டர் ஊர்சுலா வான் டென் லேயென் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

“ஏறக்குறைய 450 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களை பாதிக்கும் சட்டத்திற்குப் பொறுப்பான பதவியில் முதல் பெண்ணாக ஊர்சுலா பணியாற்றி வருகிறார்,” என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 32வது இடத்தில் வந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மேலும் மூன்று பெண்கள்: எச்சிஎல் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (60வது), ஸ்டீன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மொன்டல் (70வது) மற்றும் பயோகான் நிறுவனர் கிரன் மஸும்டார்-ஷா (76) ஆகியோர் முதல் 100 இடங்களில் வந்துள்ளனர். .

இவ்வாண்டு, விசித்திரமாக கற்பனை கதாபாத்திரமான ‘பார்பி’ பொம்மை பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

“ விண்வெளி வீரர், அமெரிக்க அதிபர் வேட்பாளர், தொழில்முனைவர், வழக்கறிஞர், கட்டடக் கலை நிபுணர் உட்பட 250 உருவங்களில் பார்பி வலம் வந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான ‘பார்பி’ திரைப்படம் 1.4 பில்லியன் டாலர் அளவுக்கு வசூல் சாதனைப் படைத்தது. அந்த கதாபாத்திரம் கலாசார அடையாளமாக உருவானது,” என்று ஃபோர்ப்ஸ் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!