மாணவியை மானபங்கப்படுத்தியதை ஒப்புக் கொண்ட ஹெலிகாப்டர் விமானி

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி ஒருவர், மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தியதை ஒப்புக் கொண்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மாணவர்த் தங்குவிடுதியில் இச்சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மானபங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 21 வயது மாணவியிடம் நியோ அய்க் சியாவ், 47, என்ற அந்த ஆடவர் பலவந்தமாக நடந்துகொண்டதாகவும் அத்துமீறி இடத்துக்குள் நுழைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மாணவியின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை உத்தரவு இட்டுள்ளது. அத்துடன் மானபங்கச் சம்பவம் எங்கு நடந்தது என்பதையும் வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023 நவம்பர் மாதம் அவர் மீது முறைப்படி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அனைத்து வகையான பணிகளிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக தற்காப்பு அமைச்சு அறிவித்தது.

அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சம்பவம் தொடர்பான கண்டுபிடிப்புகள் கவனமாக மதிப்பிடப்படும் என்று அமைச்சு கூறியிருந்தது.

நியோ, சினூக் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டியவர். நவம்பர் 13ஆம் தேதி இரு பெண்கள் (18, 21) தங்கும் அறைக்குள் அவர் நுழைந்தார்.

திரு நியோவின் வழக்கறிஞர்களான குவாஹி வூ அண்ட் பாமர் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் சுதீசன், திருவாட்டி ஜோய்ஸ் கூ ஆகியோர், பழைய நினைவுகளுக்கு இடமாக விளங்கும் பல்கலைக்கழகத்திற்கு தனது முன்னாள் மாணவர் விவகாரம் தொடர்பில் நியோ அங்கு சென்றதாக தெரிவித்தனர்.

2022 ஜூன் 30ஆம் தேதி அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த வளர்ப்புத் தந்தை இறந்துவிட்டதால் அவர் மனமுடைந்து இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

நியோ குற்றச்செயல்களைப் புரிவதற்கு முன்பு பீர் குடித்திருந்தார். தனது தந்தையின் வீட்டுக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் மாணவியின் தங்குவிடுதிக்குச் சென்றுவிட்டார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரான வோங் ஷியாவ் யின், மாணவியின் அறைக்குள் நுழைந்து நியோ தாழிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவியின் படுக்கை மீது உட்கார்ந்த அவர் படியேறியதால் தமக்கு களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

பின்னர் கூடுதல் வருமானமாக S$1,000 ஈட்ட விரும்பினால் தம்முடன் வருமாறு அவர் மாணவியிடம் தெரிவித்தார்.

இதற்கு சம்மதிக்காத மாணவியின் தோள் மீது கைவைத்து ஆயிரம் வெள்ளி போதுமா எனக் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தனது தோழியை கைபேசியில் அழைத்தார். இதைப் பார்த்த நியோ அறையைவிட்டு மெதுவாக வெளியேறினார்.

மாணவி, பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்ததுடன் காவல்துறையிலும் புகார் செய்தார்.

பிப்ரவரி 21ஆம் தேதி நியோவுக்கு தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!