ஜோகூருக்கு பிரதமர் லீ அதிகாரத்துவப் பயணம்

பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 11ஆம் தேதி அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜோகூர் செல்கிறார்.

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டத்தில் (ஆர்டிஎஸ்) ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார். அத்துடன், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான உடன்பாட்டின் கையெழுத்து நிகழ்ச்சியையும் அவர் பார்வையிடுவார்.

முன்னதாக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான இணைப்புப் பாதையின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் லீ, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்திப்பார்.

ஆர்டிஎஸ் இணைப்புப் பாதை, ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் ரயில் நிலையத்தை சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துடன் இணைக்கும். இதில் புக்கிட் சாகார் ரயில் நிலையம் தரைமட்டத்தில் அமைந்துள்ளது. உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் நிலத்தடியில் அமைந்துள்ளது.

ஆர்டிஎஸ் விரைவு ரயில் சேவை, 2026ஆம் ஆண்டு பயணிகளுக்குச் சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பேர் வரை இதில் பயணம் செய்வர் என்று கருதப்படுகிறது. இந்தப் பாதையில் ரயில்கள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் ஆறு நிமிடங்களாக இருக்கும்.

ஆர்டிஎஸ் இணைப்புப் பாதை, ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் ரயில் நிலையத்தை சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துடன் இணைக்கும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்டிஎஸ் இணைப்புப் பாதை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரு பிரதமர்களும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியைப் பார்வையிடுவர்.

இந்தச் சிறப்புப் பொருளியல் வட்டாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது. இருதரப்பு ஆற்றல்களையும் பயன்படுத்திக்கொள்ளவும் இரு நாடுகளுக்கு இடையில் பொருள்கள், முதலீடுகள் மற்றும் மக்கள் போக்குவரத்தை மேம்படுத்தவும் இது உதவும்.

பிரதமர் லீயுடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் சீ ஹொங் டாட், உள்துறை, தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோரும் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!