மூத்தோர் சுகாதாரம், வாழ்க்கையை மேம்படுத்த புதுப்பிக்கப்பட்ட பங்காளித்துவம்

மூத்தோர் சுகாதாரம், வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்த சிங்ஹெல்த் அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இடையிலான பங்காளித்துவம் ஜனவரி 16ஆம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டது.

‘கேப்’ திட்டம் தொடர்பான ஒப்பந்தம் சாங்கி பொது மருத்துவமனையில் கையெழுத்திடப்பட்டது.

துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதன்மூலம் நோய் வரும் முன் காக்கும் அணுகுமுறை தொடர்பான ஆய்வு, புத்தாக்கம், கல்வி போன்றவற்றில் ஒன்றிணைந்து செயல்படுவதே இலக்கு.

இந்தத் திட்டத்தை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மரின் பரேட்டிலும் பிடோக்கிலும் சிங்ஹெல்த் தொடங்கிவைத்தது. இத்திட்டத்தின் முக்கிய பங்காளிகளில் சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் ஒன்று.

சுகாதார மற்றும் சமுதாயப் பராமரிப்பை இணைக்கும், அறிவார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும், மூத்தோருக்கு ஏற்புடைய நகர்ப்புற இடங்களை உருவாக்கும் சமூகங்களை உருவாக்க மூத்தோர், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், நகர்ப்புற அம்சங்கள் தொடர்பாகத் திட்டமிடுபவர்கள், பராமரிப்பாளர்கள், ஏனைய பங்குதாரர்கள் ஆகியோருடன் இத்திட்டம் செயல்படுகிறது.

“மக்களின் ஆயுட்காலம் கூடுகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமாக, உற்பத்தித்திறனுடன், முழுமையாக வாழும் காலத்தை அதிகரிக்க வேண்டும்,” என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

மரின் பரேட், பிடோக் ஆகிய இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 1,000 மூத்தோர், கேப் திட்டத்தில் 2024 முதல் 2027 வரை பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!