ஹோட்டல் உருமாற்றம்: மரினா பே சேண்ட்சின் $1 பில்லியன் திட்டம்

மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) தனது சொகுசு ஹோட்டல்களின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுக்கு கூடுதலாக அமெரிக்க டாலர் 750 மில்லியனை (S$1 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் ஹோட்டலின் ‘டவர் 3’ என்ற கட்டடம், ஹோட்டல் வரவேற்புக் கூடம், ‘சேண்ட்ஸ் ஸ்கை பார்க்’ பகுதியுடன் மற்ற முக்கியப் பகுதிகளையும் உள்ளடக்கும் என்று எம்பிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம், எம்பிஎஸ்-இன் மொத்த முதலீடு அமெரிக்க டாலர் $1.75 பில்லியன் அளவுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் வரை எம்பிஎஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் 34.3 விழுக்காடு உயர்ந்து அமெரிக்க டாலர் 1 பில்லியனை எட்டிய நிலையில், அதன் முதலீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒப்புநோக்க, அதன் முந்திய ஓராண்டு நிகர வருமானம் அமெரிக்க டாலர் 750 மில்லியனாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதே காலகட்டத்தில் ஹோட்டல் அறைகளிலிருந்து கிடைத்த வருமானம் ஆண்டு அடிப்படையில், 35.9 % அதிகரித்து, அமெரிக்க டாலர் 92 மில்லியனிலிருந்து அமெரிக்க டாலர் 125 மில்லியனுக்கு உயர்ந்ததாக அறிக்கை குறிப்பிட்டது

இது பற்றிய அறிக்கையில் எம்பிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி பால் டான், எம்பிஎஸ் ஒருங்கிணைந்த வளாகம் புது உலக சொகுசுப் பயண அனுபவத்தை வழங்குவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்த இரண்டாம் கட்ட மறுமுதலீடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது இந்த ஹோட்டலை புதிய உச்சத்திற்குக் கொண்டுசெல்வதுடன் வருங்கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற வலுவான இடத்தில் வைக்கும்,” என்று திரு பால் டான் விளக்கினார்.

இந்த இரண்டாம் கட்ட மறுமேம்பாடு புதிய விருந்துணவு, சில்லறை விற்பனை தெரிவுகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 550 அறைகள் மறு வடிவமைக்கப்படுவதுடன், ‘ஸ்வீட்’ எனப்படும் முழு வசதிகளுடன் கூடிய மேலும் 380 அறைகள் சேர்க்கப்படும் என்று எம்பிஎஸ் தெரிவித்தது.

சொகுசு விருந்தோம்பல் துறையின் முன்னணி ஒருங்கிணைந்த உல்லாசத் தளமாக மரினா பே சேண்ட்சை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹோட்டலின் உருமாற்றம் முதன்முதலில் 2022ல் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க டாலர் $1 பில்லியன் முதல் கட்ட மேம்பாட்டின் கீழ், டவர் 1, 2 ஆகியவற்றில் அமைந்திருக்கும் கிட்டத்தட்ட 1,280 அறைகள் மேம்பாடு கண்டன. இவற்றில் 390, முழு வசதியுடன் கூடிய புதிய அறைகள். ஹோட்டலின் மூன்று கட்டடடங்களும் மேம்பாடு கண்டதும், 770 ‘சுவீட்’ அறைகளுடன் மொத்தம் 1,850 மேம்படுத்தப்பட்ட அறைகள் இருக்கும். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!