சீனப் புத்தாண்டு முதல் நாளன்று 144 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறக்கப்பட்டிருக்கும்

சிங்கப்பூரில் மொத்தம் 159 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் உள்ளன.

அவற்றில் சீனப் புத்தாண்டு முதல் நாளன்று (பிப்ரவரி 10) 144 பேரங்காடிகள் திறந்திருக்கும்.

42 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் 24 மணி நேரத்துக்கு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 24 மணி நேரத்துக்கு 34 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும்.

சீனப் புத்தாண்டின்போது கூடுதல் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறக்கப்படுவதால் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்க விரையத் தேவையில்லை என்றும் ஒரே நேரத்தில் பல பொருள்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என்றும் ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.

சீனப் புத்தாண்டுக்கு முந்தைய தினத்தன்று (பிப்ரவரி 9) 35 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் 24 மணி நேரத்துக்குத் திறந்திருக்கும்.

மீதமுள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் மாலை 5 மணி வரை இயங்கும்.

பிப்ரவரி 8ஆம் தேதியன்று 69 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் 24 மணி நேரத்துக்கு இயங்கும்.

ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து 30க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும் நேரம் படிப்படியாக நீட்டிக்கப்படும்.

உதாரணத்துக்கு, ஜனவரி 26லிருந்து பிப்ரவரி 8 வரை தெம்பனிஸ் மால் கடைத்தொகுதி, டௌன்டவுன் ஈஸ்ட் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் இரவு 11 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படும்.

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளிலிருந்து (பிப்ரவரி 12) ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும் நேரம் வழக்கநிலைக்குத் திரும்பும்.

கூடுதல் விவரங்களுக்கு ஃபேர்பிரைஸ் இணையப்பக்கத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!