ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் சிங்கப்பூரர்கள்

ஆசியாவிலிருந்து கூடுதலான குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளனர். 2022ல் ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியது.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது ஆஸ்திரேலியா அதன் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக திறன்பெற்ற குடியேறிகள் அங்கு செல்ல முடியவில்லை.

ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மீண்டும் திறந்த பிறகு அங்கு ஊழியர் பற்றாக்குறையைத் தீர்க்க சிங்கப்பூர், இந்தியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கூடுதலானோர் அங்கு செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் குடியேற நிரந்தர விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 2023ல் முடிவடைந்த நிதியாண்டில் 41,145ஆகக் கூடியது. ஒப்புநோக்க, 2018 முதல் 2019 வரை விசா பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 33,611ஆக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

2023ல் முடிவடைந்த நிதியாண்டில் 1,718 சிங்கப்பூரர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது. 2019ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,135ஆக இருந்தது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் குடியேறிகளின் விகிதம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, குடியேறிகளின் வருகையைக் குறைக்க அந்நாடு நடவடிக்கை எடுக்கிறது. அடுத்த ஈராண்டுகளுக்கு குடியேறிகளின் வருகையைப் பாதியாகக் குறைக்க தான் எண்ணம் கொண்டிருப்பதாக டிசம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்தது.

சிங்கப்பூரர்கள் பலதரப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்கின்றனர். மேம்பட்ட வேலை, வாழ்க்கைச் சமநிலை, சிங்கப்பூரில் இருப்பதைவிட குறைந்த வாழ்க்கைச் செலவினம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என புலம்பெயர்ந்தோருக்கான அமைப்புகள் தெரிவித்தன.

ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த சிங்கப்பூரர்கள், அங்குள்ள மெதுவான வாழ்க்கைச் சூழலையும் குறைந்த மனவுளைச்சலைத் தரும் வேலைச் சூழலையும் தாங்கள் ரசிப்பதாகக் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!