‘கியூஆர்’ குறியீடு மூலம் குடிநுழைவுச் சோதனை அறிமுகமானது

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் பயணிகள் கடவுச்சீட்டுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் புதிய வசதி மார்ச் 19ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது.

இந்தப் புதிய முறையில், ஐவர் கொண்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு ஒரு நிமிடம் 8 விநாடிகளில் குடிநுழைவுச் சோதனையை முதல் நாளான மார்ச் 19ஆம் தேதி முடித்தது.

இந்த முறை இப்போதைக்கு அந்த இரண்டு நில சோதனைச் சாவடிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஜோகூர் பாருவில் வெளியேறுவதற்கு முன்னர் மலேசிய சுங்கச்சாவடியில் கடப்பிதழை அளிக்க வேண்டும்.

பயணத்திற்கு முன்பு, பயணிகள் தங்களுடைய கைப்பேசியில் ‘MyICA’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கடவுச்சீட்டு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

சிங்கப்பூர்வாசிகள் ‘சிங்பாஸ்’ பயன்படுத்தினால் தானாக தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யலாம். கடவுச்சீட்டில் சுயவிவரங்கள் அடங்கிய பக்கத்தின் அடியில் உள்ள இரண்டு அல்லது மூன்று வரிசையில் உள்ள எழுத்துகளை கைப்பேசி கேமரா மூலம் வருடியும் விவரங்களைப் பதிவு செய்ய முடியும்.

10 கடப்பிதழ்கள் வரையிலான விவரங்களை குழுக் குறியீட்டில் சேர்க்கலாம். அவற்றை ஒருவரின் கைப்பேசி மூலம் சமர்ப்பிக்கவேண்டும்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு குழுவுக்கான கியூஆர் குறியீட்டையும் உருவாக்கலாம். 10 கடப்பிதழ்கள் வரையிலான விவரங்களை குழுக் குறியீட்டில் சேர்க்கலாம். அவற்றை ஒருவரின் கைப்பேசி மூலம் சமர்ப்பிக்கவேண்டும். விவரங்களை சேமித்து, விண்ணப்பத்தில் “குடும்பம்” அல்லது “நண்பர்கள்” போன்ற தேர்வுகளைச் செய்யலாம்.

வெளிநாட்டவர்கள் உட்பட முதல் முறையாக வருபவர்களும், கடந்த முறை சிங்கப்பூருக்கு பயணம் செய்த கடப்பிதழுக்குப் பதிலாக வேறு கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைபவர்களும் தங்கள் கடப்பிதழ்களை குடிநுழைவு அனுமதிக்காக அளிக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அடுத்தடுத்த பயணங்களில் குடிநுழைவு அனுமதிக்கு கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக தங்கள் கடப்பிதழ்களை அளிக்க விரும்புவோரும் அந்தத் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

நான்கு பயணிகள் கொண்ட கார்களுக்கு இருபது வினாடிகளும் பத்து பயணிகள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நிமிடம் வரையிலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று ஐசிஏ மதிப்பிட்டுள்ளது.

தானியங்கிப் பயணிகள் அனுமதி முறையை (ஏபிசிஎஸ்) நோக்கிய முதல் படியாக கியூஆர் குறியீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.

தானியங்கிப் பயணிகள் அனுமதி முறை துவாஸ் சோதனைச் சாவடி 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்கள் myica செயலி மூலம் ஒரு கியூஆர் குறியீட்டை உருவாக்கி, தங்கள் அங்க அடையாள (பயோமெட்ரிக்ஸ்) விவரங்களை சரிபார்ப்புக்கு வழங்குவார்கள். இதனால் ஒவ்வொரு கார் தடத்திலும் ஓர் அதிகாரியை நிறுத்த வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படுகிறது.

இத்தகைய பாதைகள் 2028ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

நில சோதனைச் சாவடி நிலையத்தில் உள்ள மற்ற வாகன அனுமதி பகுதிகளுக்கும் கியூஆர் குறியீடு அனுமதியை படிப்படியாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஐசிஏ தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!