குறுக்குத் தீவு ரயில் பாதை: மாஜு நிலையத்துக்கான பணிகள் 2024ன் இரண்டாம் காலாண்டில் துவங்கும்

குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மாஜு நிலையத்துக்கான வடிவமைப்புக்கும் கட்டுமானப் பணிக்கும் நிலப் போக்குவரத்து ஆணையம் $480 மில்லியன் பெறுமான குத்தகையை வழங்கியுள்ளது.

குறுக்குத் தீவு ரயில் பாதை, நாட்டின் எட்டாவது ரயில் பாதையாகும்.

கிளமெண்டி சாலைக்குக் கீழ் அமைந்துள்ள அந்த நிலத்துக்கு அடியில் உள்ள ரயில் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும். பயணிகள் சேவையை 2032ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு இலக்கு உள்ளது.

அந்தக் குத்தகை ‘கேடிசி சிவில் எஞ்சினியரிங் அண்ட் கன்ஸ்ட்ராக்‌ஷன்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டதாக ஆணையம் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

உள்ளூர் நிறுவனமான அது டௌன்டவுன் ரயில் பாதையில் தெம்பனிஸ் சந்திப்பு நிலையத்தையும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஆர்ச்சர்ட் பொலிவார்ட் நிலையத்தையும் கட்டியதாக ஆணையம் கூறியது. அவை இரண்டும் நிலத்துக்கு அடியில் இயங்கும் நிலையங்களாகும்.

அதோடு, அந்த நிறுவனம் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள சுங்கை பிடோக் நிலையத்துக்கான இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதாக ஆணையம் சொன்னது.

மேற்குப் பகுதியில் உள்ள மாஜு நிலையத்துக்கும், வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹவ்காங் நிலையத்துக்கும் இடையே பயணம் செய்ய இனி 35 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். தற்போது அந்தப் பயணத்தை மேற்கொள்ள ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்களாகிறது.

குறுக்குத் தீவு ரயில் பாதையில் உள்ள ஜூரோங் லேக் நிலையத்துக்கும் மாஜு நிலையத்துக்கும் இடையே பயணம் செய்ய இருபது நிமிடங்கள் எடுக்கும். தற்போது அதற்கு 40 நிமிடங்களாவதாக ஆணையம் கூறியது.

மாஜு ரயில் நிலையம், குடியிருப்பு மேம்பாடுகளுக்கும் கல்விக் கழகங்களுக்கும் அருகில் அமைந்துள்ள நிலத்துக்கு அடியில் இயங்கும் நிலையமாக இருப்பதால் அதற்கான கட்டுமானப் பணிகள் சவால்மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

பாதுகாப்பையும் நில நிலைத்தன்மையையும் உறுதிசெய்ய, ரயில் நிலைய உள்ளமைப்புகளுக்குக் கட்டுமான, மண்தோண்டும் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே, தகுந்த, நிலையான உள்ளமைப்புகள் அமைக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!