இறுதிச்சுற்றில் ஜோக்கோவிச்

நியூயார்க்: அமெரிக்க பொது விருதின் இறுதிச்சுற்றுக்கு முன்னணி ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச் முன்னேறியுள்ளார்.

அவர் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பென் செல்ட்டனை 6-3, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஆட்டத்தின் தொட்டக்கதில் இருந்தே ஜோக்கோவிச் ஆதிக்கம் செலுத்தினார்.

முதல் இரண்டு செட்டுகளை எளிதாக கைப்பற்றிய ஜோக்கோவிச்சுக்கு மூன்றாவது செட்டில் கடுமையான சவால் கொடுத்தார் செல்ட்டன்.

இருப்பினும் ஜோக்கோவிச் தமது அனுபவத்தின் மூலம் செல்ட்டனை வீழ்த்தினார்.

ஆட்டத்தை வென்ற உற்சாகத்தில் ஜோக்கோவிச் நகைச்சுவையாக செல்ட்டனைப் போல் உடல்பாவனை செய்துகாட்டினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராசை எதிர்த்து ர‌ஷ்யாவின் டேனில் மெட்வெடெவ் விளையாடினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 27 வயது மெட்வெடெவ் 7-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்கராசை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ஆட்டத்தின் முதல் செட்டிலேயே அனல் பறந்தது.

இரண்டு வீரர்களும் தங்களது முழுபலத்தையும் வெளிப்படுத்தினர்.

இருப்பினும் தமது வேகமான ஆட்டத்தால் முதல்செட்டை மெட்வெடெவ் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் அல்கராஸ் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டாவது செட்டை மெட்வெடெவ் எளிதாக வென்றார்.

இருப்பினும் மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தார் அல்கராஸ்.

ஆனால் நான்காவது செட்டில் மெட்வெடெவ் சுதாரித்துக்கொண்டு விளையாடி வெற்றியை தன்வசப்படுத்தினார்.

ஆட்டத்தில் அதிக தவறுகள் செய்துவிட்டேன், இது ஒரு நல்ல பாடம். மீண்டும் இந்த தவறுகள் நேராமல் இருக்க முயற்சி செய்வேன் என்று அல்கராஸ் கூறினார்.

தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள மெட்வெடெவ் மீண்டும் ஒரு முறை அமெரிக்க பொது விருதின் இறுதிச்சுற்றில் ஜோக்கோவிச்சை எதிர்கொள்கிறார்.

இதற்கு முன்னர் இருவரும் 2021ஆம் ஆண்டு அமெரிக்க பொது விருதின் இறுதிச்சுற்றில் மோதினர்.

அதில் மெட்வெடெவ் வென்று கிண்ணத்தைத் தட்டிச் சென்றார்.

அதனால் இம்முறை ஜோக்கோவிச் தமது முழு பலத்தையும் இறுதியாட்டத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கிறது.

ஆண்கள் டென்னிஸ் வரலாற்றில் அதிக பொது விருதுகளை வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் 36 வயது ஜோக்கோவிச்.

அவர் இதுவரை 24 முறை பொது விருதை வென்றுள்ளார்.

ஜோக்கோவிச் நான்கு முறை அமெரிக்க பொது விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில் 20 வயது அல்கராஸ் தோற்றதால் அவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இருப்பினும் ஜோக்கோவிச் இறுதியாட்டத்தில் வெல்லத்தவறினால் அல்கராஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்குச் செல்வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!