உல‌க‌ம்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது அடுத்த வாரம் குற்றம் சுமத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸம் பகி ஜனவரி 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.
காஸா நகரில் வியாழக்கிழமை (ஜனவரி 25) நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், உணவு பெற வரிசையில் நின்றுகொண்டிருந்த 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் வழிநடத்தும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.
குவந்தான் :  மலேசியாவின்  கேமரன் மலையில் ஜனவரி 26 தேதியன்று  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரு ஆடவர்கள் மாண்டனர். 
சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஜனவரி 25ஆம் தேதி இரவு சூறாவளி கிர்ரிலி கரையைக் கடந்தது.
காஸா: இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப் பெரிய வளாகத்தை இஸ்ரேலிய பீரங்கிகள் தாக்கி ‘பேரளவிலான உயிரிழப்புகளை’ ஏற்படுத்தி உள்ளதாக ஐநா ஜனவரி 24 அன்று கூறியது. ஆனால், இஸ்‌ரேல் அதனை மறுத்துள்ளது.