ஐநா புகலிடம் மீது கடும் தாக்குதல்; இஸ்ரேல் மறுப்பு; அமெரிக்கா கண்டனம்

காஸா: இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப் பெரிய வளாகத்தை இஸ்ரேலிய பீரங்கிகள் தாக்கி ‘பேரளவிலான உயிரிழப்புகளை’ ஏற்படுத்தி உள்ளதாக ஐநா ஜனவரி 24 அன்று கூறியது. ஆனால், இஸ்‌ரேல் அதனை மறுத்துள்ளது.

காஸாவில் உள்ள அந்த வளாகத்தில் நடந்த தாக்குதலுக்குத் தனது படைகள் காரணமல்ல என்ற இஸ்‌ரேல், ஹமாஸ் அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றது.

தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான் யூனிசில் இடம்பெயர்ந்த மக்கள் 30,000 பேர் தங்கியுள்ள தொழில் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடந்ததாக ஐநா கூறியது.

இந்தத் தாக்குதலுக்கு அரிதாக அமெரிக்காவும் நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளது.

“பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது; சில கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்தன. அங்கும் சிலர் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. பலர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார்கள், ஆனால் முடியவில்லை,” என்று பாலஸ்தீன வட்டாரத்திற்கான ஐநாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் கூறினார்.

கிட்டத்தட்ட 800 பேர் தங்கியிருந்த மையத்தின் கட்டடங்களில் ஒன்றில் இரு பீரங்கிக் குண்டுகள் தாக்கியதாக கிழக்கின் அருகிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண, பணி அமைப்பு கூறியது.

தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் 75 பேர் காயமடைந்தனர்.

இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பின் தலைவர் பிலிப் லாஸரினி குறிப்பிட்டார்.

“ஐநாவின் இடம் என அந்த வளாகம் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து வசதிகளுக்கும் செய்வதுபோலவே அந்த இடம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தகவல் பகிரப்பட்டு வருகின்றன. போரின் அடிப்படை விதிகள் மீண்டும் அப்பட்டமாகப் புறக்கணிப்பட்டுள்ளன”, என்று திரு லாஸரினி கூறினார்.

ஐநாவின் கான் யூனிஸ் பயிற்சி மையத்தின் மீதான தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது என்று வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியுள்ளார்.

“பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஐநா வசதிகளின் பாதுகாக்கப்பட்ட தன்மை மதிக்கப்பட வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்க முடியும்,” என்று திரு படேல் கூறினார்.

முன்னதாக, தாக்குதல் நடந்த பகுதியை ஹமாஸ் போராளிகளின் தளம் என்று இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை வெளியிட்டிருந்ததுடன், அதிக அளவிலான பொதுமக்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் சண்டை நடப்பதையும் ஒப்புக்கொண்டது.

வாஷிங்டனின் கண்டனத்தைத் தொடர்ந்து இஸ்‌ரேல் வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில், ராணுவம் அந்த மையத்தைத் தாக்கியதை மறுத்தது. அது ஹமாஸ் தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் இஸ்‌ரேல் தெரிவித்தது.

தாக்குதல் நடந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் ஐநா ஊழியர்களால் அந்தப் பகுதியை அணுக முடியவில்லை. அப்பகுதிக்கான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியிருக்கும் கான் யூனிசைச் சுற்றி வளைத்து, இஸ்ரேலியப் படைகள் ஒரு மாத காலத்தில் நடத்தியுள்ள மிகப்பெரிய தரைவழித் தாக்குதல் இது.

தாக்குதல் தொடங்கி, பிரதான சாலை மூடப்பட்ட பின்னரே, அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

காஸாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தற்போது கான் யூனிஸ், அதன் வடக்கு மற்றும் தெற்கே உள்ள நகரங்களில் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலியர்கள் நகரின் முக்கிய மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளனர், இதனால் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களில் பலரையும் மீட்புக் குழுவினர் அணுக முடியவில்லை என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!