உல‌க‌ம்

ஜார்ஜ்டவுன்: தண்ணீர் விநியோகத் தடையால் பினாங்கில் 590,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதியன்று மீண்டும் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக பினாங்கு தண்ணீர் விநியோக நிறுவனம் (பிபிஏபிபி) தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சி கிரிக்கெட் மட்டைச் சின்னத்தை இழந்துள்ளது.
தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் லாய் சிங்-டே மும்முனைப் போட்டியில் வெற்றிபெற்று உள்ளார்.
காஸா: இஸ்ரேல்-ஹமாஸ் போரின் 99வது நாளில் காஸாவுக்குள் சனிக்கிழமை சரமாரி குண்டுமழை பொழிந்து இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) அன்று தமது தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருக்கு பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து தமக்கு தெரிவிக்காமல் இருந்தது தவறுதான் என்று கூறியுள்ளார்.