சிங்க‌ப்பூர்

ஜனவரி மாதம் 27ஆம் தேதி மாலை, தேசிய நூலக வாரிய கட்டடத்தின் ‘தி பாட்’ அறையில் கவிஞர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ நூல் வெளியீடு கண்டது. இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்தக் கவிதைகளை ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவர்கள் வாசித்தனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கெம்பாங்கான் ரயில் நிலையத்திற்கு அருகே 340 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) கட்டப்படவுள்ளன.
பெருஞ்செல்வந்தரும் யுஓபி வங்கியின் முன்னாள் தலைவருமான டாக்டர் வீ சோ யாவ் காலமானார். அவருக்கு வயது 95.
காவல்துறை, மொத்தம் $10 மில்லியன் இழப்பு தொடர்பான 1,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
சிங்கப்பூரின் புதிய குடிமகனான ஃபிலிப் சான் மான் பிங், 59, என்பவர் மீது வெளிநாட்டு தலையீட்டுச் சட்டம் பாய்ந்துள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் முதல் நபர் அவர்.