சிங்க‌ப்பூர்

ஜப்பானியக் காப்புறுதி நிறுவனமான சுமிடோமோ லைஃப் இன்ஷுரன்ஸ், சிங்லைஃப் எனும் உள்ளூர் காப்புறுதி நிறுவனத்தை முழுமையாக வாங்க முன்வந்துள்ளது. அது $4.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புளோக் 2 தஞ்சோங் பகார் பிளாசாவில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று சென்ற மாதம் (நவம்பர்) $7,600க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஆண்டிறுதி கொண்டாட்டங்களை முன்னிட்டு, சட்ட அமலாக்க அமைப்புகள் தீவுமுழுதும் ஒரு மாதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, குற்ற நடவடிக்கைகளுக்காக மொத்தம் 1,394 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சிங்கப்பூரின் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் ‘ஏ2பி ஆஸ்திரேலியா’ என்னும் டாக்சி கட்டமைப்பு நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் வாங்கப்போவதாகத் தெரிவித்து உள்ளது.
கம்போடியத் தலைநகர் நோம் பென்னிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் உள்ள பயணிகளிடம் இருந்து திருட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சீன நாட்டவர் ஒருவர் சிங்கப்பூரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.