சிங்க‌ப்பூர்

ஊழல் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 215 புகார்கள் அளிக்கப்பட்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) தெரிவித்தது.
2019ஆம் ஆண்டிலிருந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மூன்று பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்தாவது நபருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய பரோட்டா மாஸ்டருக்கு 5,000 ரிங்கிட் (S$1,420) மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று அண்மையில் மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
காப்புறுதி நிறுவனத்தை ஏழு ஆண்டுகளாக ஏமாற்றிய 46 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான சுயாண்டி என்பவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) பத்து ஆண்டு, பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2010 மே முதல் 2017 செப்டம்பர் வரை அவர் போலியாக கோரிக்கைகளை விடுத்து 10.7 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்.