சிங்க‌ப்பூர்

வாஷிங்டன்: அனைத்துலக விநியோகத் தொடர்கள் தற்போது பெரும் மாற்றங்களைக் கண்டு வந்தாலும், புதிதாக உருவாகும் கட்டமைப்புகளில் சிங்கப்பூருக்கு இடம் உண்டு என்பதை நாட்டின் மீதுள்ள நம்பிக்கை உறுதிசெய்யும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்.
சிங்கப்பூரின் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ் விளங்குவதாக புதிய நூல் ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது உறுப்பினர் எண்ணிக்கையை கடந்த 3 ஆண்டுகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை (மே 1ஆம் தேதி) அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம், ஊழியர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் கையாண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி பாராட்டியுள்ளார்.