இந்தியா

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என 99 பேர் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடிக்கு ஒன்றாக வந்து வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
அமராவதி: ஆந்திரத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டார்.
லக்னோ: பீகார் மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சட்டவிரோதமாக அடுக்குப் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.
புதுடெல்லி: தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.
கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடந்தது.