You are here

இந்தியா

மாணவியின் பேச்சு; கண் கலங்கிய குஜராத் முதல்வர்

மாணவி அம்பிகா கோயலை கட்டித் தழுவிய குஜராத் முதல்வர் ஆனந்தி பென். படங்கள்: இணையம்

காந்திநகர்: பெண் சிசுக்கொலை பற்றிய நான்காம் வகுப்பு மாணவி யின் பேச்சை கேட்டுக் கூடி இருந்த பொதுமக்கள் மட்டு மின்றி, விழாவுக்குத் தலைமை யேற்ற குஜராத் முதலவர் ஆனந்தி பென்னும் கண் கலங்கினார். குஜராத்தின் ஹீரஞ்ச் என்ற கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக் கான நலத்திட்ட உதவி விழா நிகழ்ச்சியில் நான்காம் வகுப்பு மாணவி அம்பிகா கோயல், பெண் சிசுக் கொலை குறித்து உரை யாற்றினார். கருக்கலைப்புக்கு உள்ளான ஒரு பெண் குழந்தை, தனது தாய்க்கு எழுதிய கடிதம் என்ப தாகக் கூறி கற்பனையின் மூலம் வடித்த ஒரு கடிதத்தை அந்தச் சிறுமி வாசித்தாள்.

உ.பி. முதல்வர் வேட்பாளர் யார்; குழப்பத்தில் பாஜக

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக குழப்பம்.

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பாஜகவில் குழப்பம் நிலவுகிறது. அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளதால், முன்னாள் உ.பி. முதல்வரான ராஜ்நாத்சிங்கையோ அல்லது ஸ்மிருதி இரானியையோ முன்னிறுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பினாலும் கருத்துக் கணிப்புகளில் அவர்கள் இருவரையும்விட வருண்காந்திக்கே ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

களையெடுப்பு: திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

திமுக பொருளாளர் ஸ்டாலின்.

சென்னை: அதிமுக வழியைப் பின்பற்றி திமுகவும் முக்கிய நிர்வாகிகள் பலரை அதிரடியாக மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தி லேயே மாவட்ட செயலர்கள் பலரை மாற்ற திமுக தலைவர் கருணாநிதி விரும்பியதாகக் கூறப்பட்டது.

எனினும் தனக்கு ஆதரவாக உள்ள பெரும்பாலான மாவட்ட செயலர்களை மாற்றக் கூடாது என கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடிவாதமாக இருந்ததால், அந்த நடவடிக்கையை சட்டப்பேரவைத் தேர்தல் வரை ஒத்தி வைத்திருந்தார் கருணாநிதி.

கூலிப்படை கலாச்சாரத்துக்கு முடிவு: ஸ்டாலின் வலியுறுத்து

சென்னை: கூலிப்படை கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அக்கலாச்சாரம் பரவி வருவதாக தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் கவலை தெரிவித்துள்ளார். “சென்னையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தோல்வியால் துவளவில்லை: ஃபீனிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுகிறார் விஜயகாந்த்

காரைக்குடி: தேர்தல் தோல்வியால் தேமுதிக துவண்டுவிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் தேமுதிக உயிர்த்தெழும் என்றார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகரை காணவில்லை: சுவரொட்டி பரபரப்பு

கரூர்: நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையைக் காணவில்லை எனும் வாசகங்களுடன் வீடு வீடாக வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் காரணமாக கரூர் நகராட்சிப் பகுதியில் பரபரப்பு நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரூரில் தம்பிதுரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரை ஊருக்குள் நுழையவிடாமல் பல பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகை சுபஸ்ரீ மீது இரண்டு கணவர்களும் வழக்கு

நடிகை சுபஸ்ரீ

­­­சென்னை: முதல் திரு­ம­ணத்தை மறைத்து மோசடி செய்­த­தோடு சொத்­துக்­களை அப­க­ரிக்க முயற்சி செய்­த­த­தாக சின்னத் திரை நடிகை சுபஸ்ரீ மீது அவரது இரண்டு கண­வர்­களும் மனு தாக்கல் செய்­துள்­ள­னர். முதல் கணவர் தொடர்ந்த வழக்­கில் பிடி­ ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து எழும்­பூர் நீதி­மன்றத்­தில் நடிகை சுபஸ்ரீ, 33, சர­ணடைந்தார். இவர் சன் டிவியில் ஒளி­ப­ரப்­பான சொந்தம் பந்தம் தொட­ரி­லும் தற்போது ஒளி­ப­ரப்­பாகி வரும் கல்யாண பரிசு தொட­ரி­லும் நடித்து வரு­கிறார்.

பருவமழை தொடங்கியது; குற்றாலத்தில் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கும் பகுதியில் கொட்டும் நீர். படம்: இணையம்

­­சென்னை: தமி­ழ­கத்­தி­லும் கேர­ளா­வி­லும் தென்­மேற்­குப் பரு­வ­மழை தொடங்­கி­யி­ருப்­ப­தாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் பாலச்­சந்­தி­ரன் கூறி­யுள்­ளார். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்­கும் இந்தப் பருவமழையால் தமி­ழ­கத்­தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்­டி­யுள்ள பல ஏரி, ஆறு­களில் நீர் நிரம்­பும். கடந்த சில தினங்க­ளா­கவே தமி­ழ­கத்­தின் பல பகு­தி­களில் இரவு பகலாக மழை பொழிந்து வரு­கிறது. குற்­றா­லத்­தில் உள்ள அரு­வி­களி­லும் நீர் கொட்டி வரு­கிறது. இந்தப் பருவ காலத்­தில் தமி­ழ­கம் மட்­டு­மின்றி இந்­தி­யா­வின் பல பகு­தி­களில் இருந்­தும் பலர் குற்­றா­லம் செல்­வ­துண்டு.

காட்சியகத்தில் புகுந்து 7 கார்கள் கொள்ளை

சென்னை: புற­ந­கர்ப் பகு­தி­யான மணப்­பாக்­கத்­தில் உள்ள ஹோண்டா கார் காட்­சி­ய­கத்­தில் 20 பேர் கொண்ட கும்பல் நேற்று அதிகாலை புகுந்து காவ­ லா­ளியைப் பல­மா­கத் தாக்கி விட்டு 7 ஹோண்டா வாக­னங்களைத் திருடிச் சென்றது. கொள்ளை சம்பவம் பற்றி காவலாளி உட­ன­டி­யா­க நிர்­வா­கத்­துக்குத் தகவல் அளித்­தார். அதனை அடுத்து போலி­சா­ருக்கு தகவல் தரப்பட்டு உட­ன­டி­யாக போலிஸ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

வானிலை மையம் மீது எஸ்ஆர்பி புகார்

கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களை குழப்பி வருகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பால சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார். கோவையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், உண்மையில் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது என்றார்.

Pages