தெலுங்கானா: தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகல்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் அனைத்துத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் புதிதாக கட்சியில் சேர்ந்த பலருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாததைக் கண்டு காங்கிரசின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதையடுத்து தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஷேக் அப்துல்லா சோகைல், வெல்கல் ராவ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கட்சியில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனேயிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே முக்கியத் தலைவர்கள் இரண்டு பேர் கட்சியில் இருந்து வெளியேறியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகல் கடிதத்தில் ஷேக் அப்துல்லா சோகைல் கூறியிருப்பதாவது: “காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

முஸ்லிம் தலைமையை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கியுள்ள காரணத்தால் பதவி விலகுகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வெங்கல் ராவ் தனது விலகல் கடிதத்தில், “கட்சிக்காக 40 ஆண்டுகளாக உழைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன்,” என கூறியுள்ளதாகத் தெரிகிறது.

தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் விஷ்ணுவர்த்தன் ராவ், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதால், தனது ஆதரவாளர்களைத் திரட்டி நம்பள்ளி என்னும் இடத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே குந்தியிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

சலமல்ல கிருஷ்ண ரெட்டி, வேடப்பள்ளி சுபாஷ் ரெட்டி ஆகியோரும் தேர்தலில் வாய்ப்பளிக்காததால் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் பாரத ராட்டிர சமிதி கட்சியில் சேர்வதற்கு அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வரலாம் என்று பேசப்படும் நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர்கள் பதவி விலகியிருப்பது தெலுங்கானா காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!