You are here

இந்தியா

தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவிக் கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, இப்புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலையானது வங்கக் கடலில் உருவாகி உள்ளதாகத் தெரிவித்தார். “மேற்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் 43.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம்

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

காந்திகிராமம்: உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் ஆகியன இணைந்து நடத்தும் 15வது உலகத் தமிழ் இணைய மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச் சியில் பங்கேற்றுப் பேசிய ஜெர்மனி யின் கோலென் பல்கலைக்கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்லசு கூறுகை யில், “தமிழ் கூகுள், தமிழ் விக்கி பீடியா ஆகியன உள்ளதுபோல் அனைத்துத் துறை தொழில் நுட்பத்திலும் தமிழ் மொழியை கொண்டு சேர்க்க வேண்டும்.

‘பெண்களைத் தண்டிக்க முடியாது’

சென்னை: சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தமது 15 வயது பேத்தியை மது என்பவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் பார்வதி மனுத் தாக்கல் செய்தார்.

பிள்ளையார் சிலை தொடங்கியது ஊர்வலம்

சென்னை: பிள்ளையார் சிலைகள் ஊர்வலம் நேற்று தொடங்கியதையடுத்து சென்னையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி 4 நாட்கள் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 15 ஆயிரம் போலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகள் ஆறு இடங்களில் கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, விரிவான ஆலோசனைகளை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ரயில்களுக்கு வெடிகுண்டு மரட்டல்

சென்னை: நாடு முழுவதும் சதாப்தி ரயில்களுக்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட் டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை 6 மணிக்கு சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரு சதாப்தி ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், நவீன கருவிகள் மூலம் ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சோதனை நடைபெற்றது. எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

7ஆம் வகுப்புச் சிறுமியைக் கட்டி வைத்து உதைத்த 10 பேர் மீது நடவடிக்கை

வேலூர்: பணம் திருடியதாகக் குற்றம்சாட்டி 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதுச் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆம்பூர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பிரியதர்‌ஷினி என்ற அச்சிறுமியை இரு தினங்களுக்கு முன்னர் 2,200 ரூபாயைத் திருடியதாகக் கூறி சிலர் இவ்வாறு தாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசம்: உறங்கும்போது வாய்க்குள் நுழைந்த பாம்பின் தலையைக் கடித்து விழுங்கிய ஆடவர் உயிர் தப்பினார்

இந்­தூர்: வாயைத் திறந்­து­கொண்டு ஆட­வர் ஒரு­வர் அயர்ந்து தூங்­கிக் கொண்­டி­ருந்தார். அப்­போது அவரருகே ஊர்ந்து வந்த பாம்பு ஒன்று ஏதோ ஓட்டை தெரி­கின்றதே என்று அவ­ரது வாய்க்­குள் புகுந்து விட்டது. மத்­தியப் பிர­தேச மாநி­லத்­தின் இந்­தூ­ரில் இந்த சம்ப­வம் நடந்தது. வினோத் ரகு­வான்‌ஷி என்ற அந்த ஆட­வர் வாய்க்­குள் பாம்பு புகுந்த­தும் ‘அய்யோ அம்மா’ என்று அல­றும்­போது அவரை­யும் அறி­யா­மல் அச்­சத்­தில் அந்தப் பாம்பைக் கடித்து அதன் தலைப் பகுதியை விழுங்கிவிட்­டார். தலை­யற்ற முண்டம் மட்­டும் வெளி­யில் துடித்­துக்கொண்­டி­ருந்தது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து போராட்டம்

சாலைகளின் நடுவே ‘டயர்’களை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக் கப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட் டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் விவசாய அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாள் ஒன்றுக்கு 15,000 கனஅடி காவிரி நீர் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது.

சீமான்: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களில் போட்டியிடுவோம்

 தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். “ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறைபிடித்து அவற்றைத் திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் பேசியபோதும் அதற்கு மத்திய அரசோ, பிரதமர் மோடியோ பதில் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.

சில தறுதலைகளின் ஒருதலைக் காதல் - ராமதாஸ்

பாட்டாளிக்கட்சி நிறுவனர் ராமதாஸ்

சென்னை: பாட்டாளிக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ஒருதலைக் காதல் என்ற பெயரில் சில தறு தலைகள் மேற்கொண்டு வரும் பாலியல் சீண்டலுக்கு மேலும் ஓர் இளம்பெண் பலியாகியிருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இதற்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலியல் சீண் டல்களுக்குப் பெண்கள் இரை யாவது அதிகரித்து வருகிறது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

Pages