You are here

விளையாட்டு

‘ஜெர்மனியை வீழ்த்த முழு முயற்சி செய்வோம்’

பிரான்ஸ் நிர்வாகி டெஸ்சாம்ப்ஸ். படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: யூரோ காற்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் நாளை மறுநாள் நடைறவுள்ள ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது பிரான்ஸ். “நாங்கள் உலகின் சிறந்த காற்பந்து அணியுடன் மோதப் போகிறோம்,” என்று கூறியுள்ளார் பிரான்ஸ் அணியின் நிர்வாகி டெஸ்சாம்ப்ஸ். ஆனால், தனது அணி உலகின் சிறந்த அணியை வெல்லும் என்று தான் நம்பு வதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்து அணியை 5=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யது போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ்.

இங்கிலாந்தின் பங்ளாதேஷ் பயணம் சந்தேகம்

தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பங்ளாதேஷ் தொடரைப் பொதுவான இடத்தில் நடத்த இயான் மோர்கன் விருப்பம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பங்ளாதேஷ் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் பலர் உயிரிழந்தனர். இதனால் இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் வங்காளதேச பயணம் திட்டமிட்டபடி நடை பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

‘சிறப்பாக விளையாடுவோம்’

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தது. முதல் போட்டி 21ஆம் தேதி நார்த் சவுண்டில் தொடங்கி, ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணி தலைவர் விராத் கோஹ்லி, தலைமை பயிற்சியாளருடன் இணைந்து இப்பயணம் குறித்து பேட்டியளித்தார்.

எஃப்1 பந்தயம்: ஹெமில்டன் வெற்றி

சவால்களை முறியடித்து வாகை சூடிய லூவிஸ் ஹெமில்டன். படம் ராய்ட்டர்ஸ்

வியேன்னா: ஆஸ்திரிய எஃப்1 கார் பந்தயத்தை மெர்சடிஸ் அணியின் லூவிஸ் ஹெமில்டன் கைப்பற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்தப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் மெர்சடிஸ் அணியைச் சேர்ந்த மற்றொரு வீரரான நிக்கோ ராஸ்பர்க்கின் காரும் ஹெமில்டனின் காரும் மோதிக் கொண்டன.

ஐஸ்லாந்தின் கனவைக் கலைத்த பிரான்ஸ்

கோல் மழை பொழிந்து கொண்டாட்டத்தில் இறங்கிய பிரெஞ்சு வீரர்கள். படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ஐஸ்லாந்தின் ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிப் பயணத்துக்கு பிரான்ஸ் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஐஸ்லாந்தை 5=2 எனும் கோல் கணக்கில் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத் திலேயே ஒலிவியர் ஜிரூ பிரான்சை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டத்தின் துவக்கத் திலேயே தங்களுக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியிலிருந்து ஐஸ் லாந்து வீரர்களும் ரசிகர்களும் மீள்வதற்குள் பிரான்சின் இரண் டாவது கோல் புகுந்தது.

அரையிறுதிக்குள் ஜெர்மனி

ஜெர்மனியின் கோல் காப்பாளர் நியூவரை நோக்கி ஆனந்தத்துடன் ஓடிவரும் ஜெர்மன் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

போர்டோ: அனைத்துலகப் போட்டி களில் இதுவரை எட்டுமுறை இத்தாலியை வெல்ல முடியாமல் தவித்த ஜெர்மனி நேற்று அதிகாலை நடைபெற்ற மூன்றாவது காலிறுதியாட்டத்தில் இத்தாலி யைத் தோற்கடித்து அதன் ஏக்கத்தைப் போக்கிக்கொண்டது.

கூடுதல் நேரம் ஆடியும் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்ததால் வெற்றியைத் தீர்மா னிக்க பெனால்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஆறுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் வென்று ஒன்பதாவது முயற்சியில் இத்தாலியைத் தோற்கடித்தது உலகக் கிண்ண வெற்றியாளருமான ஜெர்மனி.

அதிர்ச்சி தரத் தயாராகும் ஐஸ்லாந்து

செயின்ட் டெனிஸ்: இந்த யூரோ தொடரின் கத்துக்குட்டியாக இருந் தாலும் ஆஸ்திரியா, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளை வீழ்த்தி ஆச்சரியமூட்டும் அணியாக உருவெடுத்துள்ளது ஐஸ்லாந்து. முதன்முறையாக ஒரு முக்கிய தொடருக்குத் தகுதிபெற்றதுடன் வீரநடை போட்டு காலிறுதி வரை முன்னேறியிருக்கும் ஐஸ்லாந்து, நாளை அதிகாலை மூன்று மணிக்கு நடக்கவுள்ள காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்சை எதிர்கொள்கிறது.

எதிரிகளாகும் நண்பர்கள்

வேல்சின் கேரத் பேல் - போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ

இம்மாதம் ஏழாம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலுடன் மல்லுக்கட்டவிருக்கிறது வேல்ஸ். இது இரு அணிகளுக்கு இடையிலான மோதலாகப் பார்க்கப்படாமல் இரு பெரும் ஆட்டக்காரர்களான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படத்தில் இடது ஓரம்), வேல்சின் கேரத் பேல் ஆகியோருக்கிடையிலான மோதலாகக் காற்பந்து ரசிகர்கள் காண்கின்றனர்.

வேட்கையுடன் வேல்ஸ்

சேம் வோக்ஸ் (வலமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்

லீல்: ஆட்டம் தொடங்கி கால்மணி நேரத்திற்குள்ளாகவே பெல்ஜியத் திடம் முன்னிலையை விட்டுத்தந்த போதும் மனந்தளராது போராடி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி முதன்முறை யாக யூரோ கிண்ண அரையிறுதிக் குள் நுழைந்தது வேல்ஸ் அணி. பெல்ஜியம்=வேல்ஸ் காற்பந்து அணிகள் மோதிய 2வது காலிறுதி ஆட்டம் நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. 13வது நிமிடத்தில் சுமார் 23 மீட்டர் தூரத் தில் இருந்து பெல்ஜியம் வீரர் ரட்யா நைங்கோலான் உதைத்த பந்து வேல்ஸ் கோல்காப்பாளர் வெய்ன் ஹெனசியைத் தாண்டி வலைக்குள் புகுந்தது.

‘இத்தாலியைப் பார்த்து பயப்படவேண்டும்’

தீவிர பயிற்சியில் ஈடுபடும் இத்தாலி வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

போர்டோ: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிக்கான காலி றுதிச் சுற்றில் இன்றிரவு நடை பெறும் ஆட்டத்தில் இத்தாலியும் ஜெர்மனியும் மோதுகின்றன. உலகக் காற்பந்து அரங்கில் ஜெர்மனி ஜாம்பவானாக திகழ்ந் தாலும் முக்கிய போட்டிகளில் அது இத்தாலியை வென்றதில்லை. இந்த நிலை இன்றிரவும் தொடரும் என்று இத்தாலியின் முன்னாள் நட்சத்திரம் கிறிஸ்டியன் வியேரி நம்புகிறார்.

Pages