பிரிட்டனுடன் சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவம்

சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை உத்திபூர்வ பங்காளித்துவமாக உயர்த்தும் கூட்டறிக்கையை பிரதமர் லீ சியன் லூங்கும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கும் சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் வெளியிட்டனர்.

பொருளியல் ஒத்துழைப்பு; தற்காப்பு, பாதுகாப்பு, உளவியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஒத்துழைப்பு; பருவநிலை, நீடித்த நிலைத்தன்மை, பசுமைப் பொருளியல் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு; ஆய்வு, அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு; பொதுத் துறை ஒத்துழைப்பு என ஐந்து தூண்கள் அந்த உத்திபூர்வ பங்காளித்துவத்தில் அங்கம் வகிக்கின்றன.

வெவ்வேறு துறைகளில் சிங்கப்பூரும் பிரிட்டனும் ஒத்துழைக்கவும் இணைப்பை வலுப்படுத்தவும் வாய்ப்புகளுக்கு இந்தப் பங்காளித்துவம் வாய்ப்பளிப்பதாக வெளியுறவு அமைச்சு வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உத்திபூர்வ பங்காளித்துவம் குறித்த கூட்டறிக்கை, சிங்கப்பூர்-இங்கிலாந்து உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்குமுன் 2019ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையில் ‘எதிர்காலத்திற்கான பங்காளித்துவம்’ செயல்படுத்தப்பட்டது.

மாறிவரும் சவால்களை தற்போதிலிருந்து 2030ஆம் ஆண்டுக்கும் அதற்கும் மேலாகவும் சமாளிக்க இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று நம்புவதாக சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதர் காரா ஓவன் தெரிவித்தார்.

ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா சென்றுள்ள இரு தலைவர்களும் இருதரப்புச் சந்திப்பை நடத்தினர்.

மேலும், உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமை இயக்குநரையும் டாக்டர் இங்கோஸி ஒகோஞ்சோ-இவியேலாவுடனும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமமது சையத் அல் நஹ்யானையும் பிரதமர் லீ சந்தித்தார்.

உலக வர்த்தக நிறுவனத்தின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் மேலும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து டாக்டர் இங்கோஸியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

சட்டத்தின் அடிப்படையிலான திறந்த, பலதரப்பு வர்த்தக உறவுமுறைக்கு சிங்கப்பூரின் ஆதரவை இச்சந்திப்பின்போது பிரதமர் லீ மீண்டும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூருக்கும் யுஏஇக்கும் இடையிலான அருமையான உறவை இருநாட்டுத் தலைவர்களும் தங்களது சந்திப்பின்போது வரவேற்றனர் என்று பிரதமர் அலுவலகப் பேச்சாளர் கூறினார்.

பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பு குறித்து ஆராயவேண்டுமென இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

irshathm@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!